கந்துவட்டிக் கொடுமை: மனைவி, 3 குழந்தைகளுடன் தச்சுத் தொழிலாளி தற்கொலை, விழுப்புரம் அருகே விபரீதம்
விழுப்புரம் அருகே கந்து வட்டி கொடுமையால் தச்சு தொழிலாளி குடும்பத்துடன் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


விழுப்புரம் அருகே கந்து வட்டி கொடுமையால் தச்சு தொழிலாளி குடும்பத்துடன் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
விழுப்புரம் அருகே வளவனூர் அடுத்த புதுப்பாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் மோகன். தச்சு தொழிலாளி(36). இவர் மரப்பட்டறை வைத்து நடத்தி வந்தார். இவர் கடன் சுமையால் அவதிப்பட்டு வந்தார். கந்து வட்டி கொடுமை தாங்க முடியாமல் ஞாயிற்றுக்கிழமை இரவு மோகன் தனது மனைவி விமலேஸ்வரி(30) மற்றும் மகள்கள் ராஜேஸ்வரி(8), விமலஸ்ரீ(7), மகன் சிவபாலன்(4) ஆகிய 3 குழந்தைகளுடன் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டனர்.
திங்கள்கிழமை காலை வெகுநேரம் ஆகியும் மோகன் வீட்டில் இருந்து யாரும் வெளியே வராததால் அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் சந்தேகம் அடைந்தனர். கதவை உடைத்து பார்த்தபோது மோகன் குடும்பத்துடன் தற்கொலை செய்து உயிரிழந்தது தெரியவந்தது. இது குறித்து அறிந்த வளனூர் காவல்துறையினர் நிழ்விடத்துக்து விரைந்து சென்று விசாரித்தனர்.
பின்னர் சடலங்களை மீட்டு விழுப்புரம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து அறிந்த டிஎஸ்பி நல்லசிவம் நேரில் சென்று விசாரணை நடத்தினர் வருகிறார். விழுப்புரம் அருகே கந்து வட்டி கொடுமையால் குடும்பத்துடன் 5 பேர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

விழுப்புரம் அருகே புதுப்பாளையம் கிராமத்தில் மோகன் குடும்பத்துடன் தற்கொலை செய்து கொண்ட வீடு.
இதற்கு முன்பாக கடந்த ஓராண்டுக்கு முன் தான் விழுப்புரத்தில் இணையதள(3 நம்பர்) லாட்டரி சீட்டால் நகை தொழிலாளி குடும்பத்துடன் 5 பேர் விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டனர். இது நடந்து ஓராண்டு இரு தினங்களுக்கு முன் தான் நிறைவடைந்தது. தற்போது மேலும் 5 பேர் தற்கொலை செய்துகொண்டுள்ள சம்பவம் விழுப்புரம் மாவட்ட மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...