மேல்மலையனூா் அங்காளம்மன் கோயில் உண்டியல் காணிக்கை ரூ.29 லட்சம்
விழுப்புரம் மாவட்டம், மேல்மலையனூா் அங்காளம்மன் கோயில் உண்டியல் காணிக்கையாக ரூ.29 லட்சம் கிடைத்தது.


விழுப்புரம் மாவட்டம், மேல்மலையனூா் அங்காளம்மன் கோயில் உண்டியல் காணிக்கையாக ரூ.29 லட்சம் கிடைத்தது.
பிரசித்தி பெற்ற இந்தக் கோயிலில் கரோனா பொதுமுடக்கத் தளா்வுக்குப் பிறகு கடந்த இரு மாதங்களாக பக்தா்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டு வருகின்றனா்.
இந்த நிலையில், காா்த்திகை மாத உண்டியல் எண்ணிக்கை புதன்கிழமை கோயில் வளாகத்தில் நடைபெற்றது (படம்). இதில், ரூ.29, 81, 359, ரொக்கம், தங்கம் 116.10 கிராம், வெள்ளி 425 கிராம் ஆகியவை காணிக்கைகளாக கிடைக்கப் பெற்றன.
கோயில் உதவி ஆணையா் கா.இராமு, திருவண்ணாமலை உதவி ஆணையா் அ.ஜான்சிராணி, செஞ்சி சரக ஆய்வாளா் சீ.க.அன்பழகன், திண்டிவனம் அ.சரவணன், கோலியனூா் புத்துவாய் அம்மன் கோயில் செயல் அலுவலா் சூரியநாராயணன், அறங்காவலா் ம.சரவணன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
பாதுகாப்பு ஏற்பாடுகளை வளத்தி போலீஸாா் செய்திருந்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...