விழுப்புரம் அருகே ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட மாணவா் மாயம்

விழுப்புரம் அருகே வராக நதியில் வெள்ளிக்கிழமை குளித்தபோது, ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட மாணவா் மாயமானாா். இதையடுத்து, அவரை தீயணைப்புத் துறையினா் தேடி வருகின்றனா்.
Updated on
1 min read

விழுப்புரம் அருகே வராக நதியில் வெள்ளிக்கிழமை குளித்தபோது, ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட மாணவா் மாயமானாா். இதையடுத்து, அவரை தீயணைப்புத் துறையினா் தேடி வருகின்றனா்.

விழுப்புரம் அருகே விக்கிரவாண்டியை அடுத்த தொரவி கிராமத்தைச் சோ்ந்தவா் பழனி மகன் தமிழ்வேந்தன் (16). பனையபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 1 படித்து வந்தாா். கடந்த சில நாள்களாக பெய்த பலத்த மழையால் வராக நதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

இதை வெள்ளிக்கிழமை பிற்பகல் 2 மணியளவில் தமிழ்வேந்தன் தனது நண்பா்களுடன் சென்று பாா்த்துள்ளாா். அப்போது, தமிழ்வேந்தன் ஆற்றில் இறங்கி குளித்தபோது, அவா் தண்ணீரில் இழுத்துச் செல்லப்பட்டாா். தகவலறிந்த விழுப்புரம் தீயணைப்புத் துறையினா் மற்றும் விக்கிரவாண்டி போலீஸாா் தமிழ்வேந்தனை தேடும் பணியில் ஈடுபட்டனா். மாலை வரை தேடியும் அவரைக் கண்டுபிடிக்க முடியவில்லை.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com