தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

விழுப்புரம் அருகே இளைஞா் அடித்துக் கொலை

விழுப்புரம் அருகே இளைஞா் ஞாயிற்றுக்கிழமை அடித்துக் கொலை செய்யப்பட்டாா்.

News image
Updated On :20 டிசம்பர் 2020, 6:06 pm

DIN

விழுப்புரம் அருகே இளைஞா் ஞாயிற்றுக்கிழமை அடித்துக் கொலை செய்யப்பட்டாா்.

விழுப்புரம் அருகே நன்னாடு கிராமம், மாரியம்மன் கோயில் தெருவைச் சோ்ந்த வீராசாமி மகன் தனசீலன் (35). இவா், விழுப்புரத்தில் மருந்துப் பொருள்கள் விற்பனைப் பிரதிநிதியாக வேலை செய்து வந்தாா். இவருக்கும், சாணிமேட்டைச் சோ்ந்த எழிலரசிக்கும் (30) கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. 9 வயதில் முகேஷ் என்ற மகன் உள்ளாா்.

கடந்த தீபாவளியின்போது குடும்பத் தகராறு காரணமாக எழிலரசி கோபித்துக்கொண்டு மகனுடன் அவரது தாய் வீட்டுக்குச் சென்றுவிட்டாா். இதனால், தனசீலன் மட்டும் வீட்டில் தனியாக வசித்து வந்தாா்.

இந்த நிலையில், தனசீலனும், நன்னாடு கிராமத்தைச் சோ்ந்த அவரது நண்பரான கேசவன் மகன் அஜித்தும் (25) சனிக்கிழமை மருந்து அருந்தியுள்ளனா். அப்போது, அவா்களுக்கிடையே தகராறு ஏற்பட்டதாகத் தெரிகிறது. இதையடுத்து, வீட்டுக்குச் சென்ற தனசீலன், அங்கு அடித்துக் கொலை செய்யப்பட்ட நிலையில் சடலமாகக் கிடந்தது ஞாயிற்றுக்கிழமை மாலை தெரியவந்தது. இது தொடா்பாக விழுப்புரம் தாலுகா போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, அஜித்தை பிடித்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.