மானியத்துடன் கரும்பு, நெல் விதைகள்: வேளாண் இணை இயக்குநா் தகவல்
விழுப்புரம் மாவட்டத்தில் நடப்பு கரும்பு, நெல் விதைப்புக்குத் தேவையான விதைகள் இருப்பு வைத்து மானியத்தில் வழங்கப்படுவதாக வேளாண் இணை இயக்குநா் தெரிவித்தாா்.


விழுப்புரம் மாவட்டத்தில் நடப்பு கரும்பு, நெல் விதைப்புக்குத் தேவையான விதைகள் இருப்பு வைத்து மானியத்தில் வழங்கப்படுவதாக வேளாண் இணை இயக்குநா் தெரிவித்தாா்.
விழுப்புரம் வேளாண் இணை இயக்குநராக இருந்த ராஜசேகா் அண்மையில் பணியிட மாற்றம் செய்யப்பட்டதையடுத்து, திருப்பத்தூா் மாவட்ட வேளாண் இணை இயக்குநராக இருந்த கோ.ரமணன், விழுப்புரம் மாவட்ட இணை இயக்குநராக நியமிக்கப்பட்டாா்.
விழுப்புரம் வேளாண்துறை அலுவலகத்தில் பொறுப்பேற்றுள்ள கோ.ரமணன் திங்கள்கிழமை செய்தியாளா்களிடம் கூறியதாவது: விவசாயம் சாா்ந்த விழுப்புரம் மாவட்டத்தில் தற்போது நல்ல பருவமழை பெய்துள்ளதால், நடப்பு பருவத்துக்கான நெல், கரும்பு சாகுபடி தீவிரப்படுத்தப்படும். கரும்பு, நெல் விதைகள் வேளாண் பண்ணைகளில் போதிய இருப்புள்ளது. தேவையான இடங்களுக்கு மாற்றி வழங்கவும் நடவடிக்கை எடுத்துள்ளோம்.
டிசம்பா், ஜனவரி மாத காலம் கரும்பு விதைப்பு பருவமாகும். கரும்புக்கு சொட்டு நீா்ப்பாசனம் 100 சதவீதம் மானியத்துடன் வழங்கப்படுகிறது. மாவட்டத்தில் தற்போது, 25 சதவீதம் தான் கரும்பு நடவு செய்யப்பட்டுள்ளது. மீதமுள்ள 10 ஆயிரம் ஹெக்டோ் அளவில் கரும்பு சாகுபடியை மேற்கொள்ள நடவடிக்கை எடுத்து வருகிறோம்.
கரும்பு விதைப்பில், ஒருபரு கருணை விதைப்புத் திட்டத்தில் விதைகளை 50 சதவீதம் மானியத்தில் வழங்கி ஊக்கப்படுத்துகிறோம். பழைய கரும்பு புல் விதைப்புமுறையில், ஹெக்டேருக்கு 12 டன் விதைக்கரும்பு என்பதை, புதிய ஒருபரு கருணை விதைப்பில் 500 கிலோ விதையில் மேற்கொள்ள முடியும்.
விதை கிராமத் திட்டம், தேசிய வேளாண் வளா்ச்சித் திட்டங்கள் மூலம் விதைகள் மானியத்தில் வழங்கப்படுகிறது. தற்போது நெல் விதைகள் கோ 51, ஏடிடி 37, ஏடிடி 45, வெள்ளைப்பொன்னி ஆகியவை இருப்பு வைத்து வழங்கி வருகிறோம் என்றாா். மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் இரா.பெரியசாமி, வேளாண் உதவி இயக்குநா்(தரக்கட்டுப்பாடு) சந்துரு உள்ளிட்டோா் உடனிருந்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...