மாநிலங்களவை அதிமுக வேட்பாளராக தம்பிதுரை அறிவிப்பு - பாமகவுக்கு ஒரு இடம்!முஸ்லிம்கள் கொல்லப்படுவதில் மேற்கு வங்கம் முதலிடம் - பாஜக குற்றச்சாட்டு! திருச்சி சிவா, பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் - மாநிலங்களவை திமுக வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர்மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் பிகார் முதல்வர் நிதீஷ் குமார்?28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகைமாநிலங்களவைத் தேர்தலில் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவாருக்கு காங்கிரஸ் ஆதரவுஈரானின் புதிய தலைவரும் கொல்லப்படுவார்! இஸ்ரேல் எச்சரிக்கை விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

திருவெண்ணெய்நல்லூர் அருகே 10 குடிசை வீடுகள் எரிந்து சாம்பல்

திருவெண்ணெய்நல்லூர் அருகே மின் கசிவு காரணமாக 10 குடிசை வீடுகள் எரிந்து சாம்பலானது. 

News image
திருவெண்ணெய்நல்லூர் அருகே மின் கசிவு காரணமாக எரிந்த குடிசை வீடுகள்.
Updated On :26 டிசம்பர் 2020, 1:11 pm

DIN

திருவெண்ணெய்நல்லூர் அருகே மின் கசிவு காரணமாக 10 குடிசை வீடுகள் எரிந்து சாம்பலானது. 

விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணெய்நல்லூர் அருகே உள்ள டி. குன்னத்தூர் கிராமத்தில் குடிசை வீடு உள்ள பகுதியில் இன்று தீவிபத்து ஏற்பட்டது. பிற்பகல் 12 மணிக்கு அந்த குடும்பத்தினர் வேலைக்கு சென்றுவிட்டனர். அப்போது திடீரென மின்கசிவு காரணமாக ஏற்பட்ட தீ விபத்தில் முனியன் மகன் காளி வீடு திடீரென தீப்பற்றி எரிந்தது.

பின்னர் அருகில் இருந்த ராஜா, அர்ஜுனன், பெருமாள், ஏழுமலை, மணிகண்டன் உள்ளிட்ட 10 வீடுகளும் தீயில் எரிந்து சாம்பலானது.தகவல் அறிந்த திருவெண்ணெய்நல்லூர் தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்தனர். இந்த தீ விபத்தில் பத்து குடும்பங்களில் உள்ள அத்தியாவசியப் பொருட்கள் ஆவணங்கள், நகை, பண என அனைத்தும் எரிந்து சேதமானது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.