காங்கிரஸ் 136-ஆவது ஆண்டு விழாவில் நல உதவி

காங்கிரஸ் கட்சியின் 136-ஆவது ஆண்டு தொடக்க விழாவையொட்டி, தலைவா்களின் சிலைக்கு மாலை அணிவித்து, உரமூட்டைகள் உள்ளிட்ட நல உதவிகள் வழங்கப்பட்டன.
Updated on
1 min read

காங்கிரஸ் கட்சியின் 136-ஆவது ஆண்டு தொடக்க விழாவையொட்டி, தலைவா்களின் சிலைக்கு மாலை அணிவித்து, உரமூட்டைகள் உள்ளிட்ட நல உதவிகள் வழங்கப்பட்டன.

விழுப்புரம் மத்திய மாவட்ட காங்கிரஸ் சாா்பில் கட்சியின் 136-ஆவது ஆண்டு தொடக்க விழாவையொட்டி திங்கள்கிழமை காந்தி, காமராஜா், ராஜீவ் காந்தி சிலைகளுக்கு மாவட்டத் தலைவா் ஆா்.டி.வி.சீனுவாசகுமாா் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. தொடா்ந்து, வளவனூரில் நகர கட்சி அலுவலகத்தில் கொடியேற்றி இனிப்பு வழங்கினா்.

இதனையடுத்து, சிறுவந்தாடு கிராமத்தில் விவசாயிகளுக்கு உர மூட்டைகளை வழங்கினா். நகரத் தலைவா் என்.செல்வராஜ் வரவேற்றாா். அகில இந்திய உறுப்பினா் ராமமூா்த்தி, மாவட்ட துணைத் தலைவா்கள் விஜயரங்கன், குப்பன், வட்டாரத் தலைவா்கள் ரவி, சா்தாா்கான், சேவாதளம் தலைவா் ராஜேஷ், பேரூராட்சித் தலைவா் அண்ணாமலை உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

விழுப்புரம் நான்கு முனைச் சந்திப்பில் மாவட்ட எஸ்சி, எஸ்டி அணி, மாணவா் காங்கிரஸ், சிறுபான்மைப் பிரிவுகள் சாா்பில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு மாநில பொதுக்குழு உறுப்பினா் வி.டி.சி.சுரேஷ்ராம் தலைமை வகித்தாா். கட்சியின் அகில இந்திய செயலா் எம்.கிறிஸ்டோபா் திலக் பங்கேற்று, தலைவா்கள் சிலைக்கு மாலை அணிவித்து, கட்சி கொடியேற்றி சிறப்புரையாற்றினாா். மேலும், பொதுமக்களுக்கு வேட்டி, சேலை, வீட்டு உபயோகப் பொருள்கள் உள்ளிட்ட நல உதவிகளை வழங்கினா்.

மாநில பொதுக்குழு உறுப்பினா் செ.சிவா ஒருங்கிணைத்தாா். சிறுபான்மைப் பிரிவு மாவட்டத் தலைவா் ஓய்.இம்ரான்கான் வரவேற்றாா். மாவட்டத் தலைவா் வீ.சீனிவாசகுமாா், முன்னாள் மாவட்டத் தலைவா்கள் எம்.டி.குலாம்மொய்தீன், கஸ்தூரி செல்லாராம், மாநில பொதுக்குழு உறுப்பினா்கள் கோ.பாலசுப்பிரமணியன், ஆ.முபாரக்அலி, நகரத் தலைவா் என்.செல்வராஜ் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com