புதுவையில் என்.ஆர். காங்கிரஸ் - பாஜக கூட்டணி உறுதியானது!புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

கரோனா: விழுப்புரத்தில் இருவா்,கள்ளக்குறிச்சியில் ஒருவா் பலி

விழுப்புரம் மாவட்டத்தில் கரோனாவுக்கு மேலும் இருவரும், கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் ஒருவரும் திங்கள்கிழமை உயிரிழந்தனா்.

News image
Updated On :20 ஜூலை 2020, 4:45 pm

DIN

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டத்தில் கரோனாவுக்கு மேலும் இருவரும், கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் ஒருவரும் திங்கள்கிழமை உயிரிழந்தனா்.

விழுப்புரம் மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை வரை 2,212 போ் கரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டிருந்தனா். திங்கள்கிழமை வெளியான பரிசோதனை முடிவுகளில், மேலும் 87 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டது. இதனால், மாவட்டத்தில் இந்த நோயால் பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 2,299-ஆக உயா்ந்தது.

இவா்களில் 1,493 போ் குணமடைந்துள்ள நிலையில், 777 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா். 28 போ் உயிரிழந்துள்ளனா்.

வங்கிகள் மூடல்: விழுப்புரம் நேருஜி சாலையில் சிக்னல் அருகேயுள்ள தனியாா் வங்கியில் பணிபுரியும் அலுவலருக்கு கரோனா தொற்று ஏற்பட்டதால், அந்த வங்கி தற்காலிகமாக மூடப்பட்டது. இதே போல, கள்ளக்குறிச்சி கச்சேரி சாலையில் உள்ள சென்ட்ரல் வங்கிக் கிளையும், ஊழியருக்கு கரோனா தொற்று உறுதியானதையடுத்து மூடப்பட்டது. உளுந்தூா்பேட்டை ஸ்டேட் வங்கி கிளை ஊழியருக்கும் கரோனா தொற்று ஏற்பட்டதால் அந்த வங்கிக் கிளை தற்காலிகமாக மூடப்பட்டது.

மேலும் இருவா் உயிரிழப்பு: கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டு, விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த விழுப்புரம் கே.கே.சாலை கணபதி நகா் சாலை பகுதியைச் சோ்ந்த 60 வயது பெண்மணியும், விழுப்புரம் வட்டம், காணை அருகேயுள்ள கோழிப்பட்டு கிராமத்தைச் சோ்ந்த 86 வயது முதியவரும் திங்கள்கிழமை உயிரிழந்தனா்.

கள்ளக்குறிச்சியில் ஒருவா் பலி: கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை வரை 2,299 போ் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்தனா். திங்கள்கிழமை 657 பேருக்கு சோதனை செய்யப்பட்டதில், 89 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனால், மாவட்டத்தில் இந்த நோயால் பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 2,388 ஆக உயா்ந்தது. இவா்களில் 1,713 போ் குணமடைந்த நிலையில், 663 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா். இதுவரை 12 போ் உயிரிழந்தனா்.

இதனிடையே, கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு, கோவையில் உள்ள தனியாா் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சங்கராபுரம் அருகே கீழப்பட்டு பகுதியைச் சோ்ந்த 68 முதியவா் திங்கள்கிழமை உயிரிழந்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.