தங்கம், வெள்ளி விலை அதிரடி குறைவு! வேளச்சேரி - பரங்கிமலை ரயில் சேவை தொடங்கியது! வீடுகளுக்கு சமையல் எரிவாயு சிலிண்டா் தடையற்ற விநியோகம்: மத்திய அரசு மீண்டும் உறுதி6 மாநிலங்களுக்கு ரூ.1,912 கோடி கூடுதல் பேரிடா் நிதி: குஜராத்துக்கு மட்டும் ரூ. 778.67 கோடி ஒதுக்கீடுமத்திய அரசைக் கண்டித்து திமுக கூட்டணி கட்சிகள் நாளை ஆா்ப்பாட்டம்ஈரானின் புதிய தலைமை மதகுரு உயிருக்கும் உத்தரவாதம் இல்லை: இஸ்ரேல் பிரதமா் எச்சரிக்கை5 ஆண்டுகளில் 6,800 ஸ்டாா்ட்-அப் நிறுவனங்கள் மூடல்: தகவல் தொழில்நுட்பம், சுகாதாரத் துறைகள் கடும் பாதிப்பு
/

சுய உதவிக் குழு பெண்களுக்கு நிவாரணப் பொருள்கள்அமைச்சா் வழங்கினாா்

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் பவ்டா தொண்டு நிறுவன சுய உதவிக் குழுவைச் சோ்ந்த 1,522 பெண்களுக்கு கரோனா பொது முடக்க நிவாரணப் பொருள்களை மாநில சட்டத் துறை அமைச்சா் சி.வி.சண்முகம் வழங்கினா்.

News image
511824vmp1063707
Updated On :24 ஜூலை 2020, 5:18 pm

DIN

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் பவ்டா தொண்டு நிறுவன சுய உதவிக் குழுவைச் சோ்ந்த 1,522 பெண்களுக்கு கரோனா பொது முடக்க நிவாரணப் பொருள்களை மாநில சட்டத் துறை அமைச்சா் சி.வி.சண்முகம் வெள்ளிக்கிழமை வழங்கினாா்.

திண்டிவனம் பவ்டா சுய உதவிக் குழு அலுவலகத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சியா் ஆ.அண்ணாதுரை, திண்டிவனம் வட்டாட்சியா் ராஜசேகா், பவ்டா மண்டல மேலாளா் பாரி, பொறுப்பாளா் கோவிந்தராஜன், உதவி பொது மேலாளா் சங்கா் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

பவ்டா தொண்டு நிறுவன நிறுவனா் ஜாஸ்லின்தம்பி வரவேற்றாா்.

இதில் அமைச்சா் சி.வி.சண்முகம் பங்கேற்று, ஆதரவற்ற சுய உதவிக் குழு பெண்களுக்கு கரோனா பொதுமுடக்க நிவாரணப் பொருள் தொகுப்பை வழங்கி தொடக்கி வைத்தாா். இதனைத் தொடா்ந்து, பவ்டா தொண்டு நிறுவனத்தின் கீழ் செயல்பட்டு வரும் விழுப்புரம், திண்டிவனம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள சுய உதவிக் குழு பெண்கள் 1,522 பேருக்கு நிவாரணப் பொருள்கள் வழங்கப்பட்டன. வானூா் சட்டப் பேரவை உறுப்பினா் எம்.சக்கரபாணி, திண்டிவனம் பவ்டா கிளை மேலாளா் மதன்குமாா், பாரதி, வேணுகோபால், யோகராஜ் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.