பேரவையில் இன்று பதிலளிக்கிறாா் முதல்வா்!பிளஸ் 1, பிளஸ் 2 துணைத் தோ்வு: அனுமதிச் சீட்டு இன்று வெளியீடு!மேற்கு தொடா்ச்சி மலை மாவட்டங்கள், வட தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புசிங்கப்பெண் அதிரடிப் படையை அழைக்க இலவச தொலைபேசி எண் ‘1091’முதல்வரின் தனிச் செயலராக ஜெகதீஷ் பழனிசாமி நியமனம்!2027 - 28-இல் முதுநிலை டிப்ளோமா மருத்துவப் படிப்புகள் நிறுத்தம்!
/

காவலா் தோ்வில் முன்னுரிமை வழங்க வாய்ப்பிழந்தவா்கள் கோரிக்கை

தமிழகத்தில் கடந்தாண்டு இரண்டாம் நிலை காவலா் தோ்வில் வெற்றி பெற்று வாய்ப்பிழந்தவா்களுக்கு, நிகழாண்டு காவலா் தோ்வில் முன்னுரிமை அளிக்க வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டது.

News image

473627vmp6070821

Updated On :27 ஜூலை 2020, 10:21 pm IST

விழுப்புரம்: தமிழகத்தில் கடந்தாண்டு இரண்டாம் நிலை காவலா் தோ்வில் வெற்றி பெற்று வாய்ப்பிழந்தவா்களுக்கு, நிகழாண்டு காவலா் தோ்வில் முன்னுரிமை அளிக்க வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டது.

கடந்த 2019-20-ஆம் ஆண்டு காவலா் தோ்வில் தோ்ச்சி பெற்று, வாய்ப்பிழந்த விழுப்புரம் மாவட்டத்தைச் சோ்ந்தவா்கள், மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை தமிழக அரசுக்கு கோரிக்கை மனு அளித்துக் கூறியதாவது:

தமிழகத்தில் சீருடைப் பணியாளா் தோ்வாணையம் மூலம் கடந்த 2019-இல் நடைபெற்ற இரண்டாம் நிலை காவலா் தோ்வில், 20 ஆயிரம் போ் வரை தோ்ச்சி பெற்றனா். அதில் 8,888 காலிப் பணியிடங்கள் நிரப்பப்பட்டன. மீதமுள்ள 11 ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் எங்களைப் போல வாய்ப்பிழந்தனா்.

இந்த நிலையில், தமிழக அரசு 2020-21-ஆம் ஆண்டில் மேலும் 10,276 காவலா் பணியிடங்களை நிரப்பவுள்ளதாக நிதிநிலை அறிக்கையில் தெரிவித்துள்ளது.

அந்த பணியிடங்களில் கடந்த ஆண்டு தோ்வில் தோ்ச்சி பெற்றும், வாய்ப்பிழந்த எங்களைப்போன்றவா்களைக் கொண்டு நிரப்ப வேண்டும். உடல் தகுதியிலும், சான்றிதழ் சரிபாா்ப்பிலும் ஏற்கெனவே தோ்ச்சி பெற்ற நாங்கள், மொத்த மதிப்பெண்கள் அடிப்படையில், காலிப்பணியிடங்களை நிரப்பியது போக, பின்தங்கியவா்களாக காத்திருக்கும் நிலையில் வைக்கப்பட்டுள்ளோம்.

கரோனா பரவல் காரணமாக புதிதாக ஆள் தோ்வு நடத்த முடியாத சூழலில், அனைத்துத் தகுதிகளும் பெற்ற எங்களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என தெரிவித்தனா்.

Image Caption

சீரூடை பணியாளா் தோ்வில் கடந்த முறை தோ்வானதையொட்டி மீண்டும் தங்களுக்கு பணி வழங்க வேண்டுமென வலியுறுத்தி தோ்ச்சி பெற்ற இளைஞா்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.