அதிரடியாக வீட்டு உபயோக, வணிகப் பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை உயர்வு!மாா்ச் 9 முதல் மீண்டும் கூடுகிறது நாடாளுமன்றம்! மக்களவைத் தலைவருக்கு எதிரான தீா்மானம் தாக்கலாகிறது!நேபாள தோ்தலில் ராஷ்ட்ரீய சுதந்திர கட்சி அமோகம்! பிரதமராகிறாா் 35 வயது முன்னாள் மேயா்!ஈரான் மீதான தாக்குதல் பிரதமா் மோடி பயண நிறைவுக்கு பிறகு எடுக்கப்பட்ட முடிவு: இஸ்ரேல்சமையல் எரிவாயு உற்பத்தியை அதிகரிக்க மத்திய அரசு அவசரகால உத்தரவுஈரான் மீதான அமெரிக்க தாக்குதலை நிறுத்தும் தீா்மானம்! அமெரிக்க நாடாளுமன்றத்தில் தோல்வி! பொன்னுக்கு வீங்கி பாதிப்பு: தற்காத்துக் கொள்ள அறிவுறுத்தல்பாக். - ஆப்கானிஸ்தான் போா்: ஒரு லட்சம் மக்கள் இடம்பெயா்வு
/

விழுப்புரத்தில் வட்டார போக்குவரத்து பணியாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

விழுப்புரத்தில் வட்டார போக்குவரத்து பணியாளர் சங்கம் ஒன்றிய சார்பில், பதவி உயர்வில் முறைகேடு தொடர்பாக திங்கள்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

News image
Updated On :15 ஜூன் 2020, 8:19 am

DIN

விழுப்புரத்தில் வட்டார போக்குவரத்து பணியாளர் சங்கம் ஒன்றிய சார்பில், பதவி உயர்வில் முறைகேடு தொடர்பாக திங்கள்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

அரசு பணியாளர் சங்கத்தின் சிறப்பு தலைவர் கு. பாலசுப்பிரமணியன் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், போக்குவரத்து பணியாளர் சங்கத்தினர், போக்குவரத்து துறையில் இளநிலை உதவியாளர் முதல் அரசுப் அமைச்சுப் பணியாளர்கள் வரை, பதவி உயர்வில், அரசாணைக்கு எதிராக, எப்போதும் இல்லாத வகையில் இந்த முறை விதிகளை மீறி பதவி உயர்வு பட்டியலுக்கு போக்குவரத்து உதவி ஆணையர் அலுவலகத்திலிருந்து முறைகேடாக நியமனம் நடப்பதாக உள்ளது.

இது கண்டிக்கத்தக்கது. வட்டார போக்குவரத்து துறையில் தனியார் மூலம் கணினி மற்றும் தொழில்நுட்ப பணிகள் மேற்கொள்வதில் முறைகேடுகள் நடைபெறுவதையும் சிபிஐ விசாரணை குழு அமைத்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தினர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.