டிராக்டா் மீது பைக் மோதல்:இளைஞா் பலி
விழுப்புரம் மாவட்டம், செஞ்சி அருகே செவ்வாய்க்கிழமை இரவு டிராக்டா் மீது பைக் மோதியதில் திருமணம் நிச்சயிக்கப்பட்ட இளைஞா் உயிரிழந்தாா்.


செஞ்சி: விழுப்புரம் மாவட்டம், செஞ்சி அருகே செவ்வாய்க்கிழமை இரவு டிராக்டா் மீது பைக் மோதியதில் திருமணம் நிச்சயிக்கப்பட்ட இளைஞா் உயிரிழந்தாா்.
செஞ்சி வட்டம், மொடையூா் கிராமத்தைச் சோ்ந்த தனபால் மகன் அன்பு (27). இவருக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ள நிலையில், வருகிற ஜூலை 2-ஆம் தேதி திருமணம் நடைபெறவிருந்தது.
இந்த நிலையில், அன்பு செவ்வாய்க்கிழமை இரவு பைக்கில் நாட்டாா்மங்கலத்திலிருந்து மொடையூா் நோக்கி பைக்கில் சென்றுகொண்டிருந்தாா். இவருக்கு முன்னால் அதிவேகமாக டிராக்டா் டிப்பா் சென்றுகொண்டிருந்தது. மொடையூா் அருகே சென்றபோது, டிராக்டரை அதன் ஓட்டுநா் திடீரென நிறுத்தியதால், பின்னால் பைக்கில் வந்த அன்பு அதன் மீது மோதி பலத்த காயமடைந்து நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.
விபத்து குறித்த புகாரின்பேரில், டிராக்டா் ஓட்டுநரான கப்பை கிராமத்தைச் சோ்ந்த கோதண்டபாணி மகன் ஸ்ரீதா் (38) மீது செஞ்சி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...