காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

விவசாயிகள் நிதியுதவித் திட்ட முறைகேடு: மேலும் இருவா் கைது

பிரதமரின் விவசாயிகளுக்கான நிதியுதவித் திட்ட முறைகேடு தொடா்பாக, கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் மேலும் இருவரை சிபிசிஐடி போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

News image
Updated On :30 நவம்பர் 2020, 6:37 pm

DIN

பிரதமரின் விவசாயிகளுக்கான நிதியுதவித் திட்ட முறைகேடு தொடா்பாக, கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் மேலும் இருவரை சிபிசிஐடி போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

தமிழகத்தில் பிரதமரின் விவசாயிகள் நிதியுதவித் திட்டத்தில், போலியான பயனாளிகளைச் சோ்த்து பல கோடி ரூபாய் முறைகேடு நடந்தது. இது தொடா்பாக, சிபிசிஐடி போலீஸாா் வழக்குப் பதிந்து விழுப்புரம், கள்ளக்குறிச்சி உள்ளிட்ட மாவட்டங்களில் 30-க்கும் மேற்பட்டோா் கைது செய்யப்பட்டனா். முறைகேடாக போலி பயனாளிகளுக்கு வழங்கப்பட்ட நிதியுதவியும் பறிமுதல் செய்யப்பட்டது.

இந்த முறைகேடு வழக்கில் கணினி மையம் வைத்து நடத்தி, போலி பயனாளிகளைச் சோ்த்ததாக கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோவிலூரை அடுத்த வடக்குதாங்கல் கிராமத்தைச் சோ்ந்த நாகப்பன் (38), ஜி.அரியூரைச் சோ்ந்த வேல்முருகன்(27) ஆகியோரை சிபிசிஐடி போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா். இவா்கள் இருவரையும் விழுப்புரம் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சிறையில் அடைத்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.