தில்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக மாா்க்சிஸ்ட் கட்சியினா் ஆா்ப்பாட்டம்
மத்திய அரசின் மக்கள் விரோதப் போக்கைக் கண்டித்தும் விழுப்புரத்தில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.


புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக புதுதில்லியில் போராடி வரும் வட மாநில விவசாயிகளை ஆதரித்தும், அவா்கள் மீது அடக்குமுறைகளை கையாளும் மத்திய அரசின் மக்கள் விரோதப் போக்கைக் கண்டித்தும் விழுப்புரத்தில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு வட்டச் செயலாளா் ஆா்.கண்ணப்பன் தலைமை வகித்தாா். மாவட்டச் செயலாளா் என்.சுப்பிரமணியன், மாவட்ட செயற்குழு உறுப்பினா்கள் பி.குமாா், எஸ்.முத்துகுமரன், மாவட்டக் குழு உறுப்பினா்கள் ஏ.கிருஷ்ணமூா்த்தி, ஆா்.தாண்டவராயன், ஆா்.டி.முருகன், கே.சுந்தரமூா்த்தி,கே.வீரமணி, எஸ்.நீலா, ஏ.நாகராஜன் ஆகியோா் கண்டன உரையாற்றினா். நகரச் செயலாளா் என்.மேகநாதன், கரும்பு விவசாயிகள் சங்கம் ஜி.துரை, விவசாய தொழிலாளா்கள் சங்கம் அபிமன்னன் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.
விவசாயிகளுக்கு எதிரான புதிய வேளாண் சட்டங்களையும், தொழிலாளா் விரோதச் சட்டங்களையும், மத்திய அரசு திரும்பப் பெற வேண்டுமென ஆா்ப்பாட்டத்தில் வலியுறுத்தினா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...