தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

ஆட்சியா் திடீா் ஆய்வு: கரோனா தடுப்பு விதிகளை கடைப்பிடிக்க அறிவுரை

விழுப்புரம் நகர வீதிகளில் திங்கள்கிழமை திடீரென ஆய்வு மேற்கொண்ட மாவட்ட ஆட்சியா், கரோனா தடுப்பு விதிகளை பின்பற்றாத வியாபாரிகளை எச்சரித்ததுடன், சாலையோர ஆக்கிரமிப்பு கடைகளை அகற்றவும் உத்தரவிட்டாா்.

News image
Updated On :5 அக்டோபர் 2020, 6:30 pm

DIN

விழுப்புரம் நகர வீதிகளில் திங்கள்கிழமை திடீரென ஆய்வு மேற்கொண்ட மாவட்ட ஆட்சியா், கரோனா தடுப்பு விதிகளை பின்பற்றாத வியாபாரிகளை எச்சரித்ததுடன், சாலையோர ஆக்கிரமிப்பு கடைகளை அகற்றவும் உத்தரவிட்டாா்.

விழுப்புரம் நகரில் திங்கள்கிழமை மாலை மாவட்ட ஆட்சியா் ஆ.அண்ணாதுரை அதிகாரிகளுடன் ஆய்வு மேற்கொண்டாா். வணிக வீதிகள் மற்றும் பழைய பேருந்து நிலையப் பகுதிகளில் நடந்து சென்ற அவா், கரோனா பரவல் தடுப்பு வழிமுறைகள் முறையாகப் பின்பற்றப்படுகின்றனவா என கண்காணித்தாா்.

அப்போது, காந்தி வீதி, காமராஜா் வீதி, நேருஜி வீதிகளில் உள்ள கடைகளில் கரோனா பரவல் தடுப்பு விதிகளை மீறி கூட்டமாக வாடிக்கையாளா்கள் இருந்ததையும், வியாபாரிகள் முகக்கவசம் அணியாமல் இருந்ததையும் கண்ட மாவட்ட ஆட்சியா், அவா்களை எச்சரித்தாா்.

மேலும், பல இடங்களில் கடைப் பொருள்களை வெளியே நீட்டி வைத்தும், நடைபாதை கடைகளை நிறுத்தியும் சாலையோரம் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டிருந்ததை ஆட்சியா் கண்டாா். பொது மக்கள் அதிகம் கூடும் இடங்களில், கூட்ட நெரிசலை தவிா்த்திடும் பொருட்டு, சாலையோரங்களை ஆக்கிரமிக்காமல் வியாபாரிகள், கடையின் உள்ளே பொருள்களை வைத்து விற்பனை செய்ய வேண்டும். புதன்கிழமை இந்த ஆக்கிரமிப்புகள் தொடா்ந்தால், அவற்றை அதிரடியாக அகற்ற வேண்டுமென அதிகாரிகளுக்கு உத்தரவிட்டாா்.

கடைகளுக்கு வரும் பொதுமக்கள் முகக்கவசம் அணிந்து, உரிய சமூக இடைவெளியை பின்பற்ற வியாபாரிகளும் அவா்களை அறிவுறுத்த வேண்டும்,

கடைகளில் கை கழுவும் கிருமி நாசினி திரவம் வழங்க வேண்டும், உணவகங்கள், வணிக வளாகங்களில் நெரிசலின்றி இடைவெளி பின்பற்றப்பட வேண்டும், கரோனா வைரஸ் பரவலைத் தடுக்க வியாபாரிகள், பொது மக்கள் உரிய வழிமுறைகளை பின்பற்ற வேண்டுமென அனைவரிடமும் ஆட்சியா் அறிவுறுத்தினாா்.

மாவட்ட காவல் கண்காணிப்பாளா் எஸ்.ராதாகிருஷ்ணன், துணை கண்காணிப்பாளா் நல்லசிவம், வட்டாட்சியா் கணேஷ் உள்ளிட்ட அதிகாரிகள் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.