திண்டுக்கல் சிறுமி கொலை வழக்கில் தீர்ப்பை எதிர்த்து தமிழக அரசு மேல் முறையீடு செய்யும் என சட்டம் மற்றும் நீதி மன்றங்கள் துறை அமைச்சர் சி.வி.சண்முகம் வெள்ளிக்கிழமை தெரிவித்தார்.
விழுப்புரம் மாவட்டம் செஞ்சி வட்டம் வல்லம் ஒன்றியம் சேர்விளாகம், கீழ்மாம்பட்டு ஆகிய கிராமங்களில் நடைபெற்ற இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை உறுப்பினர் சேர்க்கை மற்றும் ஆலோசனை வழங்கும் முகாமிற்கு வருகை தந்த அமைச்சர் சி.வி.சண்முகம் உறுப்பினர் சேர்க்கை முகாமை துவக்கி வைத்து சிறப்புரையாற்றினர்.
பின்னர் அமைச்சர் சி.வி.சண்முகம் செய்தியாளர்களிடம் சந்தித்தபோது கூறியதாவது, திண்டுக்கல் சிறுமி கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவரை நீதி மன்றம் விடுதலை செய்தததை தொடர்ந்து தமிழக அரசு இந்த வழக்கை ஆராயந்து மேல் முறையீடு செய்யும் எனத் தெரிவித்தார்.
மேலும், குற்றம் சாட்டப்பட்ட குற்றவாளியை விடுதலை செய்வதாக செய்தி வந்துள்ளது. இது மிகப்பெரிய கொடுமையான குற்றம் ஆகும். சிறுமி பாலியல் பலத்காரம் செய்யப்பட்டு கொடுமையான முறையில் கொலை செய்யப்பட்டுள்ளது வேதனைக்குரியது. எனவே தமிழக அரசு தீர்ப்பை ஆராயந்து மேல்முறையீடு செய்வதற்கான அத்தனை நடவடிக்கைகளையும் மேற்கொள்ளும் என தெரிவித்தார்.
திண்டுக்கல் சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த வழக்கில் குற்றவாலியை விடுவித்து நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ள நிலையில் அவ் வழக்கை மேல்முறையீடு செய்ய வலியுறுத்தி தமிழகம் முழுவதும் முடி திருத்தும் கடைகள் அடைக்கப்பட்டிருந்தன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
கமலுடன் நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு எப்போது? ரஜினி அளித்த அப்டேட்!
விஜயகாந்த்போல விஜய்யும் திமுகவுக்கு தாக்கத்தை ஏற்படுத்துவார்: டிடிவி தினகரன்

முதியவரைத் தள்ளிய பாதுகாவலர்! கோபப்பட்டு திட்டிய விஜய்!

மேட்டுப்பாளையத்தில் ஜாலியாக உலா வந்த பாகுபலி!
வீடியோக்கள்

“தில்லா, கெத்தா தனியா நிற்கிறோம்”: புதுச்சேரியில் Vijay பிரசாரம்
இணையதளச் செய்திப் பிரிவு

மே 4-ஆம் தேதிக்குப் பிறகு பேசுவோம்! - தேர்தலில் போட்டியிடாதது குறித்து Annamalai
இணையதளச் செய்திப் பிரிவு

மேன்சன் குத்து பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

இந்திரா பாடல் வெளியீடு!
இணையதளச் செய்திப் பிரிவு


