சென்னையில் பிரதமர் மோடி முக்கிய ஆலோசனை! அண்ணாமலை பங்கேற்பு!நான் எந்தத் தொகுதியும் கேட்கவில்லை: அண்ணாமலை விளக்கம்தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800 உயர்வு! புதுச்சேரியில் இன்று விஜய் பிரசாரம்நாளை 8 புறநகா் மின்சார ரயில்கள் ரத்துமின்சார அடுப்புகள், பாத்திரங்கள் உற்பத்தியை ஊக்குவிக்க நடவடிக்கை: மத்திய அரசு ஆலோசனைசென்னைப் பல்கலை. வளாகங்களில் படப்பிடிப்புகளுக்கு 5 மடங்கு கட்டண உயா்வு6-ஆம் வகுப்புமுதல் மும்மொழிப் பாடம்: சிபிஎஸ்இ திட்டம்
/

திண்டிவனம் அருகே லாரி மீது கார் மோதல்: 3 பேர் பலி

திண்டிவனம் அருகே லாரியின் மீது கார் மோதியதில் 3 பேர் பலியானார்கள். 

News image

விபத்துக்குள்ளான கார்.

Updated On :31 அக்டோபர் 2020, 4:49 am

திண்டிவனம் அருகே லாரியின் மீது கார் மோதியதில் 3 பேர் பலியானார்கள். 

சென்னை வேளச்சேரியில் வசித்து வரும் அருப்புக் கோட்டையைச் சேர்ந்த சுப்புலட்சுமி குடும்பத்தினர், ஒரு துக்க நிகழ்ச்சிக்காக சனிக்கிழமை அதிகாலை  சென்னையிலிருந்து காரில் புறப்பட்டு அருப்புக்கோட்டைக்கு சென்றுகொண்டிருந்தனர்.

சனிக்கிழமை அதிகாலை விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அடுத்த கன்னிகாபுரத்தில், சென்னை- திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் கார் சென்றபோது, முன்னால் சென்ற லாரியின் பின்பக்கத்தில் திடீரென மோதி விபத்துக்குள்ளானது.

Story image

இந்த விபத்தில், சம்பவ இடத்திலேயே சுப்புலட்சுமி (50), கெளதம் (35 ), வேல் பாண்டி (40) ஆகிய 3 பேர் பலியாகினர். மேலும் காரில் வந்த இரண்டு குழந்தைகள் உள்பட 6 பேர் பலத்த காயமடைந்த நிலையில் விழுப்புரம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.  

விபத்து குறித்து மயிலம் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.