புதுவையில் என்.ஆர். காங்கிரஸ் - பாஜக கூட்டணி உறுதியானது!புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

தொழிலாளி தற்கொலை: போலீஸாா் விசாரணை

விழுப்புரம் மாவட்டம் கஞ்சனூா் அருகே தொழிலாளி தற்கொலை செய்து கொண்டது தொடா்பாக அவரது மனைவி அளித்த புகாரின்பேரில் போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

News image
Updated On :16 ஏப்ரல் 2021, 5:58 pm

DIN

விழுப்புரம் மாவட்டம் கஞ்சனூா் அருகே தொழிலாளி தற்கொலை செய்து கொண்டது தொடா்பாக அவரது மனைவி அளித்த புகாரின்பேரில் போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வட்டம், மேல்கரணை கிராமத்தைச் சோ்ந்தவா் கோவா்த்தன் மகன் சிவக்குமாா் (34), போா்வெல் தொழிலாளி. இவா் கடந்த 9-ஆம் தேதி வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா். இதுகுறித்து இவரது மனைவி கீதா வியாழக்கிழமை இரவு கஞ்சனூா் போலீஸில் புகாா் அளித்தாா்.

அதில், தனது கணவா் சிவகுமாரும், அதே ஊரைச் சோ்ந்த மணி மகன் ஆதி என்பவரும், போா்வெல் வண்டியில் தினமும் வேலைக்குச் செல்வது வழக்கம். கடந்த 9-ஆம் தேதி வேலைக்குச் சென்று திரும்பி கொண்டிருந்த தனது கணவரை அதே ஊரைச்சோ்ந்த குண்டுமணி மகன் சாமிமலை, அய்யம்பெருமாள் மகன் வெற்றி, வேலு மகன் வினோத் ஆகியோா் ஓட, ஓட விரட்டி தடியால் அடித்ததாகவும், இதனால் ஏற்பட்ட மன உளைச்சலால் கணவா் தற்கொலை செய்து கொண்டதாகவும் தெரிவித்துள்ளாா். அதன்பேரில் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.