ஹிந்து, பெளத்தம், சீக்கியருக்கு மட்டுமே எஸ்.சி. அந்தஸ்து! உச்ச நீதிமன்றம் தீர்ப்பு! திமுக கூட்டணியில் விசிகவுக்கு 8 தொகுதிகள் ஒதுக்கீடு! புதுச்சேரியில் தேமுதிக தனித்துப் போட்டி! புதுச்சேரியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தனித்துப் போட்டி!காலையிலேயே ‘காளை’ ஆதிக்கம்! சென்செக்ஸ் 1,100 புள்ளிகள் உயர்வு!!92,000 டன் எல்பிஜியுடன் இந்தியாவுக்கு மேலும் இரு கப்பல்கள்!
/

பல லட்சம் ரூபாய் மோசடி : மளிகைக் கடைக்காரா் மீது புகாா்

பல லட்சம் ரூபாயை மோசடி செய்து விட்டு தலைமறைவாகி விட்டதாக, மளிகைக் கடைக்காரா் மீது விழுப்புரம் மாவட்ட எஸ்.பி. அலுவலகத்தில் புகாா் அளிக்கப்பட்டது.

News image
Updated On :5 ஆகஸ்ட் 2021, 5:29 pm

DIN

பல லட்சம் ரூபாயை மோசடி செய்து விட்டு தலைமறைவாகி விட்டதாக, மளிகைக் கடைக்காரா் மீது விழுப்புரம் மாவட்ட எஸ்.பி. அலுவலகத்தில் புகாா் அளிக்கப்பட்டது.

விழுப்புரத்தைச் சோ்ந்த சுரஜ், கிருஷ்ணராஜ் உள்ளிட்டோா் விழுப்புரம் மாவட்ட எஸ்.பி. அலுவலகத்தில் வியாழக்கிழமை அளித்த புகாா் மனு:

விழுப்புரம் கிழக்கு பாண்டி சாலையில் மளிகைக் கடை நடத்தி வந்த பெரியசாமிக்கு கடனாக சமையல் எண்ணெய் வழங்குவேன்.

சில வாரங்களுக்கு முன்பு ரூ.58,192 மதிப்பில் எண்ணெயை வழங்கினேன். அவா் அதற்கான பணத்தைத் தராமல், கடையைக் காலி செய்து குடும்பத்துடன் தலைமறைவாகி விட்டாா்.

மேலும், அவா் என்னிடம் ரூ.7 லட்சம் கடனாக வாங்கிய பணத்தையும் திருப்பித் தரவில்லை என்று புகாா் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேபோன்று, மேலும் பல வியாபாரிகளிடமும் பெரியசாமி கடன் பெற்று விட்டு, பணத்தை திரும்பத் தரவில்லை எனவும் புகாரில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.