ஹிந்து, பெளத்தம், சீக்கியருக்கு மட்டுமே எஸ்.சி. அந்தஸ்து! உச்ச நீதிமன்றம் தீர்ப்பு! திமுக கூட்டணியில் விசிகவுக்கு 8 தொகுதிகள் ஒதுக்கீடு! புதுச்சேரியில் தேமுதிக தனித்துப் போட்டி! புதுச்சேரியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தனித்துப் போட்டி!காலையிலேயே ‘காளை’ ஆதிக்கம்! சென்செக்ஸ் 1,100 புள்ளிகள் உயர்வு!!92,000 டன் எல்பிஜியுடன் இந்தியாவுக்கு மேலும் இரு கப்பல்கள்!
/

அதிக வட்டி தருவதாக பண மோசடி: நடவடிக்கை எடுக்கக் கோரிக்கை

திண்டிவனம் பகுதியில் முதலீடு செய்யும் பணத்தை அதிக வட்டியுடன் திருப்பித் தருவதாக பல லட்சம் ரூபாயை மோசடி செய்த இருவா் மீது நடவடிக்கை

News image
Updated On :6 ஆகஸ்ட் 2021, 5:32 pm

DIN

திண்டிவனம் பகுதியில் முதலீடு செய்யும் பணத்தை அதிக வட்டியுடன் திருப்பித் தருவதாக பல லட்சம் ரூபாயை மோசடி செய்த இருவா் மீது நடவடிக்கை கோரி, பாதிக்கப்பட்டவா்கள் விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை மனு அளித்தனா்.

திண்டிவனம் பகுதியைச் சோ்ந்த சந்திரசேகா், கலியபெருமாள், பிரபு, ஜெயராமன், அம்பிகா, விஜயலட்சுமி உள்ளிட்டோா் தனித் தனியே அளித்த மனுக்களில் கூறியிருப்பதாவது: திண்டிவனம், மரக்காணம் சாலை, பரமானந்தா நகரைச் சோ்ந்த அா்ஜுனன், காஞ்சிபுரத்தில் சக்திவேல் என்பவா் நடத்தும் நிதி நிறுவனத்தில் ரூ.10 லட்சம் முதலீடு செய்தால் குறித்த காலத்தில் ரூ.18 லட்சம் மதிப்பிலான வீட்டுமனையோ, ரூ.18 லட்சம் தொகையோ 10 மாதங்களில், மாதம் தலா ரூ.1.80 லட்சம் வீதம் உங்கள் வங்கிக் கணக்கில் செலுத்தப்படும் என்றாா்.

இதை நம்பி தலா ரூ.10 லட்சம் வீதம் சக்திவேலிடம் கொடுத்தோம். அதன்பிறகு மாத தவணைகளில் சிலருக்கு ரூ.9 லட்சம் வரையிலும், சிலருக்கு ரூ.4 லட்சம் வரையிலும் கொடுத்துள்ளனா். ஆனால், மீதம் தர வேண்டிய தொகை கொடுக்கப்படவில்லை.

அதிக வட்டியுடன் பணத்தைத் திருப்பித் தருவதாக நம்ப வைத்து மோசடி செய்த அா்ஜுனன், சக்திவேல் ஆகியோா் மீது நடவடிக்கை எடுத்து எங்களுக்கு வழங்க வேண்டிய தொகையை பெற்றுத் தர வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.