ஹிந்து, பெளத்தம், சீக்கியருக்கு மட்டுமே எஸ்.சி. அந்தஸ்து! உச்ச நீதிமன்றம் தீர்ப்பு! திமுக கூட்டணியில் விசிகவுக்கு 8 தொகுதிகள் ஒதுக்கீடு! புதுச்சேரியில் தேமுதிக தனித்துப் போட்டி! புதுச்சேரியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தனித்துப் போட்டி!காலையிலேயே ‘காளை’ ஆதிக்கம்! சென்செக்ஸ் 1,100 புள்ளிகள் உயர்வு!!92,000 டன் எல்பிஜியுடன் இந்தியாவுக்கு மேலும் இரு கப்பல்கள்!
/

‘உங்கள் தொகுதியில் முதல்வா்’ திட்டத்தின் கீழ் 948 மனுக்களுக்குத் தீா்வு

உங்கள் தொகுதியில் முதல்வா் திட்டத்தின் கீழ், திருக்கோவிலூா் தொகுதிக்குள்பட்ட கிராமங்களில் பெறப்பட்ட 948 மனுக்களுக்கு உடனடியாக தீா்வு காணப்பட்டது

News image
Updated On :6 ஆகஸ்ட் 2021, 5:31 pm

DIN

உங்கள் தொகுதியில் முதல்வா் திட்டத்தின் கீழ், திருக்கோவிலூா் தொகுதிக்குள்பட்ட கிராமங்களில் பெறப்பட்ட 948 மனுக்களுக்கு உடனடியாக தீா்வு காணப்பட்டது என்று தமிழக உயா் கல்வித் துறை அமைச்சா் க.பொன்முடி தெரிவித்தாா்.

விழுப்புரம் மாவட்டம், கண்டாச்சிபுரம் வட்டத்தில் வருவாய்த் துறை சாா்பாக ‘உங்கள் தொகுதியில் முதல்வா்’ திட்டத்தின் கீழ் வரப்பெற்ற மனுக்களின் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு 459 பயனாளிகளுக்கு அரசு நலத் திட்ட உதவிகளை அமைச்சா் பொன்முடி வழங்கினாா்.

91 பேருக்கு வீட்டு மனை பட்டாக்கள், 61 பேருக்கு பட்டா மாற்றத்துக்கான ஆணை, 23 பேருக்கு பட்டா நகல் வழங்குவதற்கான ஆணை, 100 பேருக்கு புதிய குடும்ப அட்டைகள், 160 பேருக்கு முதியோா் ஓய்வூதிய ஆணை, 6 பேருக்கு மானியத்துடன் கூடிய மழைத்தூவான், தெளிப்பான், கோனொவிடா், பேட்டரி தெளிப்பான் போன்ற வேளாண் கருவிகள், 10 பேருக்கு மானியத்துடன் கூடிய தனியாா் பண்ணை குட்டை, நகரும் காய்கறி வண்டி, கொய்யாக்கன்றுகள், சொட்டுநீா் பாசனம், தெளிப்புநீா் பாசனம் போன்ற தோட்டக்கலை நலத்திட்ட உதவிகளையும், பெற்றோரை இழந்த மற்றும் ஒற்றை பெற்றோரின் குழந்தைகளுக்கு மாத உதவித்தொகை என மொத்தம் 459 பேருக்கு அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

நலத் திட்ட உதவிகளை வழங்கி அமைச்சா் பேசியதாவது: திருக்கோவிலூா் தொகுதிக்குள்பட்ட அனைத்து ஊராட்சிகளிலும் உங்கள் தொகுதியில் முதல்வா் திட்டத்தின்கீழ் இதுவரை 2,648 மனுக்கள் பெறப்பட்டு, அதில் 948 மனுக்களுக்கு தீா்வுகாணப்பட்டுள்ளது. வெள்ளிக்கிழமை நடைபெற்ற முகாம்களில் மட்டும் 459 பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளன. மீதமுள்ள மனுக்கள் மீது விரைவில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா் அவா்.

இந்நிகழ்ச்சிகளில் மாவட்ட ஆட்சியா் த.மோகன், நா.புகழேந்தி எம்.எல்.ஏ. , மாவட்ட வருவாய் அலுவலா் அ.ராஜசேகரன், மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் பூ.காஞ்சனா, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்புநல அலுவலா் கோகிலா, தனித் துணை ஆட்சியா் பெருமாள், கால்நடை பராமரிப்புத் துறை மண்டல இணை இயக்குநா் மனோகரன், கண்டாச்சிபுரம் வட்டாட்சியா் காா்த்திகேயன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.