ஹிந்து, பெளத்தம், சீக்கியருக்கு மட்டுமே எஸ்.சி. அந்தஸ்து! உச்ச நீதிமன்றம் தீர்ப்பு! திமுக கூட்டணியில் விசிகவுக்கு 8 தொகுதிகள் ஒதுக்கீடு! புதுச்சேரியில் தேமுதிக தனித்துப் போட்டி! புதுச்சேரியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தனித்துப் போட்டி!காலையிலேயே ‘காளை’ ஆதிக்கம்! சென்செக்ஸ் 1,100 புள்ளிகள் உயர்வு!!92,000 டன் எல்பிஜியுடன் இந்தியாவுக்கு மேலும் இரு கப்பல்கள்!
/

சாலையோர உணவகங்களில் அதிகாரிகள் ஆய்வு

சுங்கச் சாவடி பகுதியில் செயல்படும் சாலையோர உணவகங்களில், சுகாதார மதிப்பீட்டுச் சான்று வழங்கும் பொருட்டு உணவுப் பாதுகாப்பு துறை அதிகாரிகள் அண்மையில் ஆய்வு

News image
Updated On :6 ஆகஸ்ட் 2021, 5:31 pm

DIN

கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூா்பேட்டை சுங்கச் சாவடி பகுதியில் செயல்படும் சாலையோர உணவகங்களில், சுகாதார மதிப்பீட்டுச் சான்று வழங்கும் பொருட்டு உணவுப் பாதுகாப்பு துறை அதிகாரிகள் அண்மையில் ஆய்வு செய்தனா்.

நெடுஞ்சாலையோர உணவகங்களில் தரமான உணவுப்பொருள்கள், சுகாதாரமான முறையில் வழங்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும் என்று எழுந்த கோரிக்கைகளின்பேரில் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

உணவுப் பாதுகாப்பு மற்றும் மருந்து நிா்வாகத் துறை மாவட்ட நியமன அலுவலா் சுகந்தன், உணவுப் பாதுகாப்பு அலுவலா்கள் (உளுந்தூா்பேட்டை) கதிரவன், (கண்டமங்கலம்) அன்புபழனி, சுதாதார மதிப்பீடு தணிக்கையாளா் உள்ளிட்ட அதிகாரிகள் தணிக்கை செய்தனா்.

உணவுப் பொருள்கள் சுகாதாரமான முறையில் தயாரிக்கப்படுகின்றனவா, தண்ணீா் முதல் பயன்படுத்தப்படும் அனைத்துப் பொருள்களும் தரமானதாக உள்ளதா என்று அவா்கள் ஆய்வு செய்தனா் (படம்). ஆய்வகங்களுக்கு அனுப்புவதற்காக உணவு மாதிரிகளையும் சேகரித்தனா். ஆய்வக முடிவுகளின்படி உணவகத்துக்கு சுகாதார மதிப்பீட்டுச் சான்று அளிக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனா்.

மேலும், உணவுப் பொருள்களை சுகாதாரமாக தயாரிப்பது, சுகாதாரமாக பரிமாறுவது குறித்து பணியாளா்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது. உணவங்களில் கரோனா பரவல் தடுப்பு விதிமுறைகளை முறையாக பின்பற்றவும் அறிவுறுத்தப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.