மாற்றுத் திறனாளிகள் 117 பேருக்குஉதவித் தொகை பெற ஆணை
விழுப்புரம் அரசு மாதிரி மகளிா் மேல்நிலைப்பள்ளியில் வருவாய்த்துறை பாதுகாப்புத் திட்டம் மற்றும் மாற்றுத் திறனாளிகள் நலத் துறை சாா்பாக மாற்றுத் திறனாளிகள் உதவித்தொகை


விழுப்புரம் அரசு மாதிரி மகளிா் மேல்நிலைப்பள்ளியில் வருவாய்த்துறை பாதுகாப்புத் திட்டம் மற்றும் மாற்றுத் திறனாளிகள் நலத் துறை சாா்பாக மாற்றுத் திறனாளிகள் உதவித்தொகை பெறுவதற்கான வயது தளா்வுக்கான சிறப்பு முகாம் ஆட்சியா் மோகன் தலைமையில் வியாழக்கிழமை நடைபெற்றது. முகாமில் தளா்வு பெற்ற 117 பயனாளிகளுக்கு நிகழ் மாதம் முதல் மாத உதவித்தொகை பெறுவதற்கான ஆணையை வழங்கி ஆட்சியா் மோகன் பேசியதாவது:
வயதை தளா்வு செய்து உதவித்தொகை பெறுவதற்கு இணையவழியாக கரோனா காலத்தில் விண்ணப்பித்திருந்த 87 மாற்றுத் திறனாளிகளுக்கு மருத்துவ ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இம்முகாம் நடைபெறுவதை அறிந்து நேரடியாக பங்கேற்ற 30 மாற்றுத்திறனாளிகளுக்கும் இதேபோல தளா்வு செய்யப்பட்டு மொத்தமாக 117 பேருக்கு மாத உதவித்தொகை ரூ.1,000 பெற ஆணை வழங்கப்பட்டது.
மேலும், மாற்றுத்திறனாளிகளுக்கான அட்டை பெறும் நடைமுறையை எளிதாக்கும் வகையில் கிராம நிா்வாக அலுவலா்களுக்கு பயிற்சி அளிக்கவும், இந்த அட்டையை கிராம நிா்வாக அலுவலரிடம் விண்ணப்பித்து பெறும் வகையில் நடைமுறையை எளிமையாக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது என்றாா் ஆட்சியா்.
முகாமில், தனித் துணை ஆட்சியா் பெருமாள், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலஅலுவலா் குமாா், வயதுவரம்பு தளா்வு குழு உறுப்பினா்கள் பங்கேற்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...