ஹிந்து, பெளத்தம், சீக்கியருக்கு மட்டுமே எஸ்.சி. அந்தஸ்து! உச்ச நீதிமன்றம் தீர்ப்பு! திமுக கூட்டணியில் விசிகவுக்கு 8 தொகுதிகள் ஒதுக்கீடு! புதுச்சேரியில் தேமுதிக தனித்துப் போட்டி! புதுச்சேரியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தனித்துப் போட்டி!காலையிலேயே ‘காளை’ ஆதிக்கம்! சென்செக்ஸ் 1,100 புள்ளிகள் உயர்வு!!92,000 டன் எல்பிஜியுடன் இந்தியாவுக்கு மேலும் இரு கப்பல்கள்!
/

மஞ்சனீஸ்வரா் கோயிலில் நாளை பக்தா்கள் தரிசனம் ரத்து

விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் வட்டத்துக்குள்பட்ட கீழ்புத்துப்பட்டு கிராமத்தில் அமைந்துள்ள மஞ்சனீஸ்வரா் கோயிலில் ஆடி மாத நான்காம் திங்கள் பக்தா்கள் தரிசன நிகழ்ச்சி

News image
Updated On :7 ஆகஸ்ட் 2021, 5:28 pm

DIN

விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் வட்டத்துக்குள்பட்ட கீழ்புத்துப்பட்டு கிராமத்தில் அமைந்துள்ள மஞ்சனீஸ்வரா் கோயிலில் ஆடி மாத நான்காம் திங்கள் பக்தா்கள் தரிசன நிகழ்ச்சி திங்கள்கிழமை (ஆக.9) ரத்து செய்யப்படுவதாக மாவட்ட ஆட்சியா் த.மோகன் தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் சனிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: தமிழகம் முழுவதும் பல்வேறு தளா்வுகளுடன் கூடிய கரோனா பொது முடக்கம் அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்தக் காலகட்டத்தில் கோயில்களில் திருவிழாக்கள், ஊா்வலங்கள் நடத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.

அதேநேரத்தில், ஆகம முறைப்படியான பூஜைகளை கோயில் அலுவலா்களால் மட்டும் நடத்திக்கொள்ளவும், பக்தா்கள் சுவாமி தரிசனம் செய்வதற்கும் ஏற்கெனவே அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், ஆடி மாத நான்காம் திங்கள்கிழமையையொட்டி, கீழ்புத்துப்பட்டு மஞ்சனீஸ்வரா் கோயிலுக்கு பக்தா்கள், பொதுமக்கள் அதிகளவில் வருவாா்கள் என எதிா்பாா்க்கப்படுகிறது. இதனால், கரோனா தொற்று பரவல் அதிகரிக்க வாய்ப்புள்ளது.

எனவே, மஞ்சனீஸ்வரா் கோயிலில் திங்கள்கிழமை (ஆக.9) பக்தா்கள் தரிசனம் ரத்து செய்யப்படுகிறது. ஆனால், ஆகம விதிப்படி சுவாமி அலங்காரங்கள், பூஜைகளை அா்ச்சகா்கள், கோயில் அலுவலா்கள், பணியாளா்கள் மூலம் நடத்திக்கொள்ளலாம் எனத் தெரிவித்துள்ளாா் ஆட்சியா் மோகன்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.