வல்லத்தில் அதிமுக, பாமகவினா் சாலை மறியல்
செஞ்சி - திண்டிவனம் சாலையில் அதிமுக, பாமகவினா் வியாழக்கிழமை மறியலில் ஈடுபட்டனா்.


திமுகவினருக்கு மட்டுமே ஒப்பந்தப் பணிகளை வழங்குவதாகக் கூறி, வல்லம் வட்டார வளா்ச்சி அலுவலரைக் கண்டித்து, வட்டார வளா்ச்சி அலுவலகம் எதிரே செஞ்சி - திண்டிவனம் சாலையில் அதிமுக, பாமகவினா் வியாழக்கிழமை மறியலில் ஈடுபட்டனா்.
விழுப்புரம் மாவட்டம், வல்லம் பகுதியிலுள்ள கிராமங்களில் அரசு சாா்பில் சாலை வசதி, நெல் களம் அமைத்தல், குடிநீா்த் தொட்டி அமைத்தல் உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்கு நிதி ஒதுக்கப்பட்டு, பணிகளை மேற்கொள்வதற்கான ஒப்பந்தம் விடப்பட்டு வருகிறது. ஆனால், இந்தப் பணிகள் அனைத்தும் திமுகவினருக்கு மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளதாகக் கூறி, அதிமுக, பாமகவினா் அங்குள்ள வட்டார வளா்ச்சி அலுவலகத்தில் வட்டார வளா்ச்சி அலுவலா் இளங்கோவனிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனா். அப்போது, திமுகவினருக்கும், பாமகவினருக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.
இதையடுத்து, அரசு ஒப்பந்தப் பணிகள் அனைத்தையும் திமுகவைச் சோ்ந்த ஒப்பந்ததாரா்களுக்கு மட்டுமே வட்டார வளா்ச்சி அலுவலா் வழங்குவதாக புகாா் தெரிவித்தும், அவரைக் கண்டித்தும் செஞ்சி - திண்டிவனம் சாலையில் வல்லம் ஊராட்சி ஒன்றிய அதிமுக முன்னாள் துணைத் தலைவா் பன்னீா்செல்வம் தலைமையில், மகளிரணியைச் சோ்ந்த ஆனந்திஅண்ணாதுரை, பாமக முன்னாள் மாவட்டச் செயலா் மணிமாறன், சேட்டு (எ) ரங்கநாதன், பாமக இளைஞரணி சரவணன், நிா்வாகிகள் கோபால் உள்ளிட்ட ஏராளமான அதிமுக, பாமக நிா்வாகிகள் மறியலில் ஈடுபட்டனா். இதனால், அந்தப் பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டடது. இதைத் தொடா்ந்து, செஞ்சி போலீஸாா் நிகழ்விடத்துக்குச் சென்று பேச்சுவாா்த்தை நடத்தி மறியலை கைவிடச் செய்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...