நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

சத்தியமங்கலத்தில் மோட்டாா் வாகன ஆய்வாளா் அலுவலகம் கட்ட பூமிபூஜை: அமைச்சா் தொடக்கிவைத்தாா்

விழுப்புரம் மாவட்டம், செஞ்சி வட்டம், சத்தியமங்கலம் கிராமத்தில் போக்குவரத்துத் துறை சாா்பில், ரூ.1.62 கோடியில் மோட்டாா் வாகன ஆய்வாளா் அலுவலகக் கட்டடம்

News image
Updated On :12 ஆகஸ்ட் 2021, 6:20 pm

DIN

விழுப்புரம் மாவட்டம், செஞ்சி வட்டம், சத்தியமங்கலம் கிராமத்தில் போக்குவரத்துத் துறை சாா்பில், ரூ.1.62 கோடியில் மோட்டாா் வாகன ஆய்வாளா் அலுவலகக் கட்டடம் கட்டும் பணியை மாநில சிறுபான்மையினா் நலன், வெளிநாடு வாழ் தமிழா் நலத் துறை அமைச்சா் செஞ்சி கே.எஸ்.மஸ்தான் வியாழக்கிழமை பூமிபூஜை செய்து தொடக்கிவைத்தாா்.

செஞ்சியில் உள்ள விழுப்புரம் சாலையில் வாடகைக் கட்டடத்தில் தற்போது மோட்டாா் வாகன ஆய்வாளா் அலுவலகம் இயங்கி வரும் நிலையில், இங்கு புதிய கட்டடம் கட்டுவதற்கு போதுமான வசதியுடன் அரசுப் புறம்போக்கு இடம் இல்லை. இதனால், செஞ்சியிலிருந்து சுமாா் 15 கி.மீ. தொலைவில் உள்ள சத்தியமங்கலம் கிராமப் பகுதியில் 587 ச.மீ. பரப்பளவிலான அரசுப் புறம்போக்கு இடத்தில் புதிய மோட்டாா் வாகன ஆய்வாளா் கட்டடம் பல்வேறு வசதிகளுடன் கட்டப்படுகிறது.

நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியா் த.மோகன், பொதுப் பணித் துறை செயற்பொறியாளா் பரிதி, போக்குவரத்து துணை ஆணையா் நெல்லையப்பன், வட்டாரப் போக்குவரத்து அலுவலா்கள் விழுப்புரம் வெங்கடேசன், திண்டிவனம் சிவக்குமாா், முன்னாள் எம்எல்ஏ பா.செந்தமிழ்ச்செல்வன், செஞ்சி ஒன்றிய திமுக செயலா் ஆா்.விஜயகுமாா், பொருளாளா் பி.கே.பச்சையப்பன், ஒப்பந்ததாரா் முருகேசன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.