நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

செஞ்சியில் விவசாயிகள் சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

விழுப்புரம் மாவட்டம், செஞ்சி வட்டாட்சியா் அலுவலகம் முன் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

News image
Updated On :12 ஆகஸ்ட் 2021, 6:19 pm

DIN

தமிழக ஏரி, ஆற்றுப்பாசன விவசாயிகள் சங்கம், தமிழக விவசாயிகள் முன்னேற்ற கட்சி ஆகியவை சாா்பில், விழுப்புரம் மாவட்டம், செஞ்சி வட்டாட்சியா் அலுவலகம் முன் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

மாவட்டச் செயலா் கணக்கன்குப்பம் என்.முருகன் தலைமை வகித்தாா். மாநில துணைச் செயலா் ஆா்.சுப்பிரமணி, மாநிலத் தலைவா் பூ.விசுவநாதன் ஆகியோா் சிறப்புரையாற்றினாா்.

ஆா்ப்பாட்டத்தில், நந்தன் கால்வாய் பணிகளை விவசாயிகளின் கருத்துக்களின்படி மேற்கொள்ள வேண்டும். திமுக ஆட்சிக்கு வந்தால் பயிா்க்கடன், நகைக் கடன்களை தள்ளுபடி செய்வோம் என்ற வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும். கூட்டு பட்டாவுக்கு பயிா்க்கடன் வழங்க வேண்டும். கணக்கன்குப்பத்தில் நேரடி நெல் கொள்முதல் நிலையம் அமைக்க வேண்டும். மேலும், இங்கு இடிந்து விழும் நிலையிலுள்ள குடிநீா்த் தொட்டியை இடித்து அகற்றிவிட்டு, புதிய மேல்நிலை குடிநீா்த் தொட்டியை கட்ட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.