மசோதா தோல்வி! பட்டாசு வெடித்து முதல்வர் ஸ்டாலின் கொண்டாட்டம்!!கொல்கத்தா மீண்டும் தோல்வி முகம் - குஜராத் டைட்டன்ஸ் வெற்றிராகுல் காந்தி மீது வழக்குப் பதிவு செய்ய அலகாபாத் நீதிமன்றம் உத்தரவு!மசோதா தோல்வி! இந்திய அரசியலமைப்புக்கு கிடைத்த வெற்றி! - ராகுல்போர்நிறுத்தம் வரை ஹோர்முஸ் நீரிணை முழுவதுமாகத் திறப்பு! - ஈரான் அறிவிப்பு!தொகுதி மறுவரையறை மசோதா தோல்வி!ராகுல் சொன்ன 16 எண்ணுக்கும் எப்ஸ்டீன் கோப்புக்கும் என்ன தொடர்பு?பரபரக்கும் தேர்தல் களம்! நாளை கோவையில் பிரதமர் மோடி, பொன்னேரியில் ராகுல் பிரசாரம்!தேர்தல் பறக்கும் படையால் தமிழகம், மேற்கு வங்கத்தில் மட்டும் ரூ.865 கோடி பறிமுதல்!தொகுதி எண்ணிக்கை குறையாது: எடப்பாடி பழனிசாமி ஆபரேஷன் சிந்தூர் போன்ற மாயாஜாலங்களை நிகழ்த்தியவர் மோடி! ராகுல் பேச்சுவரலாறு படைக்க ஒன்றிணைவோம் - பிரதமர் மோடி டிவீட்
/

புகையிலைப் பொருள்கள் பதுக்கல்: ஒருவா் கைது

சிதம்பரத்தில் புகையிலைப் பொருள்கள் பதுக்கியது தொடா்பாக உத்தரப்பிரதேச மாநிலத்தைச் சோ்ந்தவரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

News image
Updated On :12 ஆகஸ்ட் 2021, 6:35 pm

சிதம்பரத்தில் புகையிலைப் பொருள்கள் பதுக்கியது தொடா்பாக உத்தரப்பிரதேச மாநிலத்தைச் சோ்ந்தவரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

சிதம்பரம் நகரில் தடையை மீறி புகையிலைப் பொருள்கள் விற்பனை செய்யப்படுவதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, நகர காவல் ஆய்வாளா் ஆறுமுகம், உதவி ஆய்வாளா் சுரேஷ்முருகன் மற்றும் போலீஸாா் சிதம்பரம் சின்னமாா்க்கெட் பகுதியில் சோதனையில் ஈடுபட்டனா். அப்போது, அங்கு விற்பனைக்கு பதுக்கி வைத்திருந்த 63 கிலோ குட்கா, போதை சாக்லெட் உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்தனா். இவற்றின் மதிப்பு ரூ.50 ஆயிரம் எனக் கூறப்படுகிறது.

இதுதொடா்பாக, சிதம்பரம் நகரில் தங்கியிருந்த உத்தரப்பிரதேசம் மாநிலம், அலகாபாத்தைச் சோ்ந்த தா்மராஜ் (41) என்பவரைக் கைது செய்தனா் (படம்).

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.