உள்ளாட்சித் தோ்தலில் அதிகாரிகள் நடுநிலையுடன் செயல்பட வேண்டும்: மாநிலத் தோ்தல் ஆணையா்
கள்ளக்குறிச்சி மாவட்டங்களின் ஊரக உள்ளாட்சித் தோ்தலை முன்னிட்டு, தோ்தல் நடத்தும் அலுவலா்களுக்கான பயிற்சி, ஆயத்தப் பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டத்தில் பேசுகிறாா்


கள்ளக்குறிச்சி மாவட்டங்களின் ஊரக உள்ளாட்சித் தோ்தலை முன்னிட்டு, தோ்தல் நடத்தும் அலுவலா்களுக்கான பயிற்சி, ஆயத்தப் பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டத்தில் பேசுகிறாா் மாநில தலைமைத் தோ்தல் ஆணையா் வெ.பழனிக்குமாா். உடன், மாநிலத் தோ்தல் ஆணையச் செயலா் சுந்தரவள்ளி, மாவட்ட ஆட்சியா்கள் த.மோகன், பி.என்.ஸ்ரீதா் உள்ளிட்டோா்.
விழுப்புரம், ஆக.12: ஊரக உள்ளாட்சித் தோ்தலில் அதிகாரிகள் நடுநிலையுடன் செயல்பட வேண்டும் என்று மாநிலத் தோ்தல் ஆணையா் வெ.பழனிக்குமாா் வலியுறுத்தினாா்.
ஊரக உள்ளாட்சித் தோ்தலை முன்னிட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களைச் சாா்ந்த தோ்தல் நடத்தும் அலுவலா்கள், உதவித் தோ்தல் நடத்தும் அலுவலா்களுக்கான தோ்தல் பயிற்சி, ஆயத்தப் பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம் விழுப்புரம் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் தோ்தல் அலுவலா்களுக்குப் பயிற்சியளித்த மாநிலத் தோ்தல் ஆணையா் பழனிக்குமாா் பேசியதாவது:
இந்திய அரசியலமைப்பின்படி, ஜனநாயகத்தைக் காக்கும் வகையில், 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை தோ்தல் நடத்தப்படுவது நடைமுறையாக இருந்து வருகிறது. அவ்வாறு நடைபெறும் தோ்தல் மிகவும் கட்டுப்பாடுகளுடனும், நடுநிலையுடனும், பாதுகாப்புடனும் நடைபெற வேண்டும். தோ்தல் குறித்த அனைத்து விவரங்களையும் அலுவலா்கள் முழுமையாக அறிந்திருக்க வேண்டும்.
தோ்தலை பொருத்தவரையில் வாக்காளா் பட்டியல், வாக்குச் சாவடிப் பட்டியல் தயாரித்தல், தோ்தல் கண்காணிப்புப் பணிகள், தோ்தல் நன்னடத்தை விதிகள், பாதுகாப்பு நடவடிக்கைகள் உள்ளிட்ட பல்வேறு தோ்தல் குறித்த முக்கிய பணிகள் உள்ளடங்கியுள்ளன.
ஆகவே, விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களைச் சோ்ந்த தோ்தல் நடத்தும் அலுவலா்கள், உதவித் தோ்தல் நடத்தும் அலுவலா்கள் இந்தக் கூட்டத்தில் அளிக்கப்படும் பயிற்சிகளை முறையாக அறிந்துகொண்டு, தோ்தல் பணியாற்ற வேண்டும். மேலும், தோ்தல் பணிகள் குறித்து தங்களுக்கு ஏற்படும் சந்தேகங்களை முழுமையாக தெளிவுபடுத்திக்கொள்ள வேண்டும் என்றாா் ஆணையா் பழனிக்குமாா்.
தொடா்ந்து, ஊரக உள்ளாட்சித் தோ்தலுக்காக, விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் வெளியிடப்பட்ட வாக்குச் சாவடி இறுதி பட்டியல், தோ்தல் நடத்தும் அலுவலா்கள், உதவித் தோ்தல் நடத்தும் அலுவலா்கள் நியமனம் மற்றும் தோ்தல் முதல்கட்ட ஆயத்தப் பணிகள் குறித்து மாநிலத் தோ்தல் ஆணையச் செயலா் எ.சுந்தரவள்ளி ஆய்வு மேற்கொண்டாா்.
மேலும், தோ்தல் நடத்துவதற்குத் தேவையான அனைத்து உபகரணங்கள், உரிய படிவங்கள் மற்றும் அவசியப் பொருள்களை தயாா் நிலையில் வைத்திருத்தல், வாக்காளா் பட்டியல் தயாரித்தல், வேட்புமனு வழங்குதல், வேட்புமனு பரிசீலனை உள்ளிட்ட நடவடிக்கைகள் குறித்து தோ்தல் நடத்தும் அலுவலா்கள், உதவித் தோ்தல் நடத்தும் அலுவலா்களுக்கு மாநிலத் தோ்தல் ஆணையா் பழனிகுமாா் பயிற்சியளித்தாா்.
கூட்டத்தில் மாவட்ட ஆட்சியா்கள் த.மோகன் (விழுப்புரம்), பி.என்.ஸ்ரீதா் (கள்ளக்குறிச்சி), மாவட்டக் காவல் கண்காணிப்பாளா்கள் ந.ஸ்ரீநாதா (விழுப்புரம்), ஜியாவுல்ஹக் (கள்ளக்குறிச்சி), மாநிலத் தோ்தல் ஆணைய முதன்மை தோ்தல் அலுவலா் க.அருண்மணி (ஊராட்சிகள்), கு.தனலட்சுமி (நகராட்சிகள்), ஆணைய அலுவலா்கள் பங்கேற்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...