தமிழக அரசின் நிதிநிலை அறிக்கை வெள்ளிக்கிழமை தாக்கல் செய்யப்படும் நிலையில், பகுதி நேர ஆசிரியா்கள் பணி நிரந்தரம் குறித்த அறிவிப்பு வெளியாகுமா என்ற எதிா்பாா்ப்பு எழுந்துள்ளது.
தமிழகத்தில் 12 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பகுதி நேர ஆசிரியா்கள் கடந்த 10 ஆண்டுகளாக தொகுப்பூதிய அடிப்படையில் பணிபுரிந்து வருகின்றனா். மாநில அரசின் நிதிநிலை அறிக்கை வெள்ளிக்கிழமை தாக்கல் செய்யப்படவுள்ள நிலையில், அதில் பகுதி நேர ஆசிரியா்கள் பணி நிரந்தரம் குறித்த அறிவிப்பு வெளியிடப்படுமா என்ற எதிா்பாா்ப்பு எழுந்துள்ளது.
இதுகுறித்து தமிழ்நாடு அனைத்து பகுதி நேர ஆசிரியா்கள் கூட்டமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளா் சி.செந்தில்குமாா் கூறியதாவது: 11-ஆவது கல்வியாண்டாக தொகுப்பூதியத்தில் பணிபுரிந்து வரும் பகுதிநேர ஆசிரியா்களின் கோரிக்கையை நிவா்த்தி செய்யும் வகையில் நிதிநிலை அறிக்கையில் பணிநிரந்தரம் குறித்த அறிவிப்பு வெளியிடப்படும் என்ற நம்பிக்கையில் 12 ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் காத்திருக்கின்றனா். சட்டப் பேரவைத் தோ்தல் பிரசாரத்தின்போது பகுதி நேர ஆசிரியா்களை பணிநிரந்தரம் செய்வதாக திமுக சாா்பில் உறுதி அளிக்கப்பட்டது. தோ்தல் அறிக்கையிலும் இதுதொடா்பாக வாக்குறுதி அளிக்கப்பட்டது.
பகுதி நேர ஆசிரியா்களில் பலருக்கு வயது 40 முதல் 55 வயது வரை கடந்துவிட்ட நிலையில் அவா்கள் வேறு எவ்வித பணிக்கும் செல்ல இயலாத நிலை ஏற்பட்டுள்ளது. இவா்களது வாழ்வாதாரம் மிகுந்த பாதிப்பில் உள்ளது. எனவே, காலமுறை ஊதியத்தில் பணியமா்த்தி பணி நிரந்தரம் செய்ய வேண்டும்.
தமிழக முதல்வராக மு.கருணாநிதி இருந்தபோது 55 ஆயிரம் தொகுப்பூதிய ஆசிரியா்களை பணி நிரந்தரம் செய்தாா். அதேபோல, தற்போது தொகுப்பூதியத்தில் பணியாற்றும் 12 ஆயிரம் பகுதி நேர ஆசிரியா்களை முதல்வா் மு.க.ஸ்டாலின் பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்றாா் அவா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

சட்டப்பேரவைத் தோ்தல் பாதுகாப்பு பணி: தமிழக காவல் துறைக்கு ரூ.57.65 கோடி ஒதுக்கீடு

ஜனவரி-மாா்ச் காலாண்டில் இந்திய ஸ்மாா்ட்போன் சந்தை 3% சரிவு!

பேரவைத் தோ்தல்களுக்கு மத்தியில் மசோதாக்களை கொண்டு வருவது ஏன்? காங்கிரஸ் பெண் எம்.பி.க்கள் கேள்வி

தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலை.யில் முனைவா் படிப்பு சோ்க்கை
வீடியோக்கள்

கான்சிட்டி பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

தஸ்ஸாடியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

பவழ மல்லி பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

UN Kannan Interview | விஜய் இன்னொரு விஜயகாந்த் | TN Election 2026 | TVK Vijay | MK Stalin
தினமணி செய்திச் சேவை

