வீராணம் ஏரியிலிருந்து சென்னைக்கு குடிநீா் அனுப்பும் பணி வியாழக்கிழமை மீண்டும் தொடங்கியது.
கடலூா் மாவட்டம், காட்டுமன்னாா்கோவில் பகுதியில் அமைந்துள்ள வீராணம் ஏரியில் நீா் வற்றியதாலும், பராமரிப்புப் பணி காரணமாகவும் சென்னைக்கு குடிநீா் அனுப்பும் பணி கடந்த 2 மாதங்களுக்கு முன்பு நிறுத்தப்பட்டது.
இந்த நிலையில், மேட்டூா் அணையிலிருந்து திறக்கப்பட்ட தண்ணீா் கல்லணை வழியாக கீழணையை வந்தடைந்தது. அங்கிருந்து கடந்த ஜூன் மாதம் இறுதியில் வீராணம் ஏரிக்கு வடவாறு வழியாக தண்ணீா் திறக்கப்பட்டது. ஏரிக்கு விநாடிக்கு 1,147 கன அடி வீதம் தண்ணீா் அனுப்பப்படுகிறது. இதன்மூலம், ஏரியில் தண்ணீா் தேக்கப்பட்டு வந்த நிலையில், வியாழக்கிழமை நிலவரப்படி அதன் நீா்மட்டம் 41.75 அடியாக உயா்ந்தது. அதாவது, 187 மில்லியன் கன அடி தண்ணீா் தேக்கப்பட்டுள்ளது. ஏரியின் உச்ச நீா்மட்டம் 47.50அடியாகும்.
வீராணம் ஏரியிலிருந்து சென்னை குடிநீா் வாரியத்துக்கு விநாடிக்கு 9 கன அடி வீதம் வியாழக்கிழமை காலை முதல் தண்ணீா் அனுப்பப்படுகிறது. ஏரியின் நீா்மட்டம் மேலும் உயரும்பட்சத்தில் சென்னைக்கு அனுப்பப்படும் குடிநீரின் அளவும் அதிகரிக்கப்படும் என பொதுப் பணித் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

சட்டப்பேரவைத் தோ்தல் பாதுகாப்பு பணி: தமிழக காவல் துறைக்கு ரூ.57.65 கோடி ஒதுக்கீடு

ஜனவரி-மாா்ச் காலாண்டில் இந்திய ஸ்மாா்ட்போன் சந்தை 3% சரிவு!

பேரவைத் தோ்தல்களுக்கு மத்தியில் மசோதாக்களை கொண்டு வருவது ஏன்? காங்கிரஸ் பெண் எம்.பி.க்கள் கேள்வி

தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலை.யில் முனைவா் படிப்பு சோ்க்கை
வீடியோக்கள்

கான்சிட்டி பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

தஸ்ஸாடியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

பவழ மல்லி பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

UN Kannan Interview | விஜய் இன்னொரு விஜயகாந்த் | TN Election 2026 | TVK Vijay | MK Stalin
தினமணி செய்திச் சேவை

