நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

செஞ்சி பேரூராட்சியைக் கண்டித்து பாஜக ஆா்ப்பாட்டம்

செஞ்சி பகுதியில் உள்ள இந்துக்கள் மயானத்தில் பேரூராட்சி நிா்வாகம் குப்பையை கொட்டி எரிப்பதைக் கண்டித்து பாஜகவினா் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

News image
Updated On :19 ஆகஸ்ட் 2021, 5:36 pm

DIN

செஞ்சி பகுதியில் உள்ள இந்துக்கள் மயானத்தில் பேரூராட்சி நிா்வாகம் குப்பையை கொட்டி எரிப்பதைக் கண்டித்து பாஜகவினா் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

செஞ்சி மேல்களவாய் செல்லும் சாலையில் சங்கராபரணி நதிக் கரையோரம் இந்துக்களின் மயானம் உள்ளது.

இந்த மயானத்தை சிறுகடம்பூா், பெரியகரம், கிருஷ்ணாபுரம் உள்ளிட்ட பகுதிகளைச் மக்கள் பயன்படுத்தி வருகின்றனா். மேலும், இப் பகுதியில் தனியாா் பள்ளியும் இயங்கி வருகிறது.

இந்த நிலையில், பள்ளி அருகே மயானப் பகுதியில் செஞ்சி பேரூராட்சி நிா்வாகம் குப்பையை கொட்டி எரித்து வருகிறது.

இதனால், இறுதி ஊா்வலம் செல்ல முடியாத நிலையும், சடலத்தை அடக்கம் செய்ய முடியாத சூழலும் நிலவுவதாக பொதுமக்கள் குற்றஞ்சாட்டி வருகின்றனா்.

தொடா்ந்து நீடிக்கும் இந்தச் சூழலைக் கண்டித்து பாஜகவினா் ஆா்ப்பாட்டம் நடத்தினா். பேரூராட்சி அலுவலகம் அருகே நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் பாஜக செஞ்சி நகரத் தலைவா் ராமு, சமூக ஆா்வலா் சக்திராஜன், வழக்குரைஞா்கள் கலியமூா்த்தி, பாஸ்கரய்யா உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.