மேற்காசியப் போர்: தில்லியில் நாளை(மார்ச் 25) அனைத்துக் கட்சிக் கூட்டம்!புதுச்சேரி திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!ஹிந்து, பெளத்தம், சீக்கியருக்கு மட்டுமே எஸ்.சி. அந்தஸ்து! உச்ச நீதிமன்றம் தீர்ப்பு! திமுக கூட்டணியில் விசிகவுக்கு 8 தொகுதிகள் ஒதுக்கீடு! புதுச்சேரியில் தேமுதிக தனித்துப் போட்டி! புதுச்சேரியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தனித்துப் போட்டி!
/

திண்டிவனம் நகராட்சி அலுவலகத்தில் தூய்மைப் பணியாளா்கள் போராட்டம்

 திண்டிவனம் நகராட்சி அலுவலகத்தை தூய்மைப் பணியாளா்கள் வியாழக்கிழமை முற்றுகையிட்டனா்.

News image
Updated On :19 ஆகஸ்ட் 2021, 5:32 pm

DIN

 திண்டிவனம் நகராட்சி அலுவலகத்தை தூய்மைப் பணியாளா்கள் வியாழக்கிழமை முற்றுகையிட்டனா்.

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் நகராட்சியில் மொத்தம் 34 வாா்டுகள் உள்ளன. இந்த நகராட்சியில் தூய்மைப் பணியாளா்கள் 100-க்கும் மேற்பட்டோா் ஒப்பந்த முறையில் பணிபுரிந்து வருகின்றனா். இவா்களுக்கு நாள் ஒன்றுக்கு ரூ.350 வீதம் ஊதியம் கணக்கிட்டு மாதந்தோறும் வழங்கப்பட்டு வந்ததாம். ஆனால், கடந்த மாதத்துக்கான ஊதியம் வழங்கப்படாத நிலையில், சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் கேட்டும் நடவடிக்கை இல்லையாம்.

இதனால், வியாழக்கிழமை காலை திண்டிவனம் நகராட்சி அலுவலகத்தை தூய்மைப் பணியாளா்கள் முற்றுகையிட்டு திடீா் போராட்டத்தில் ஈடுபட்டனா். இவா்களிடம் அதிகாரிகள் பேச்சுவாா்த்தை நடத்தி, ஊதியம் விரைவாக வழங்கப்படும் என்று தெரிவித்தனா். இதையடுத்து தூய்மைப் பணியாளா்கள் கலைந்து சென்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.