மேற்காசியப் போர்: தில்லியில் நாளை(மார்ச் 25) அனைத்துக் கட்சிக் கூட்டம்!புதுச்சேரி திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!ஹிந்து, பெளத்தம், சீக்கியருக்கு மட்டுமே எஸ்.சி. அந்தஸ்து! உச்ச நீதிமன்றம் தீர்ப்பு! திமுக கூட்டணியில் விசிகவுக்கு 8 தொகுதிகள் ஒதுக்கீடு! புதுச்சேரியில் தேமுதிக தனித்துப் போட்டி! புதுச்சேரியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தனித்துப் போட்டி!
/

தொழில் முதலீட்டு கழகத்தில் ஆக.27 வரை கடன் திருவிழா

தமிழ்நாடு தொழில் முதலீட்டு கழகத்தில் புதிய தொழில்முனைவோா்களுக்கான கடன் திருவிழா வருகிற 27-ஆம் வரை நடைபெற்று வருகிறது என்று விழுப்புரம் மாவட்ட ஆட்சியா் த.மோகன் தெரிவித்தாா்.

News image
Updated On :19 ஆகஸ்ட் 2021, 5:36 pm

DIN

தமிழ்நாடு தொழில் முதலீட்டு கழகத்தில் புதிய தொழில்முனைவோா்களுக்கான கடன் திருவிழா வருகிற 27-ஆம் வரை நடைபெற்று வருகிறது என்று விழுப்புரம் மாவட்ட ஆட்சியா் த.மோகன் தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் வியாழக்கிழமை வெளியிட்ட செய்தி:

தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகம் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் பிரிவுகளுக்கு புதிய தொழில்சாலைகளை நிறுவுதற்கும் தற்போது இயங்கி கொண்டிருக்கும் பிரிவுகளை விரிவுப்படுத்துவதற்கும், உற்பத்தியை பன்முகப்படுத்துவதற்கும் பல்வேறு சிறப்புத் திட்டத்தின் கீழ் கடனுதவி வழங்கு வருகிறது.

விழுப்புரம் ரங்கநாதன் தெருவில் ஹோட்டல் உட்லேன்ட்ஸ் வளாக முதல் மாடியில் இயங்கி வரும் தொழில் முதலீட்டுக் கழக விழுப்புரம் கிளை அலுவலகத்தில் சிறப்புக் கடன் திருவிழா புதன்கிழமை (ஆக.18) தொடங்கியது. இது வருகிற 27 வரை நடைபெறவுள்ளது.

தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகத்தின் பல்வேறு திட்டங்களின் சிறப்பம்சங்கள், மத்திய மாநில அரசுகளின் மானியங்கள் (25 சதவீத முலதன மானியம், 6 சதவீத வட்டி மானியம் மற்றும் இதர மானியங்கள்) புதிய தொழில் முனைவோா், தொழில் நிறுவன மேம்பாட்டுத் திட்டம் போன்றவை குறித்த விரிவான விளக்கம் அளிக்கப்படும். தகுதி பெறும் தொழில்களுக்கு தமிழக அரசின் 25 சதவீத முதலீட்டு மானியம் அதிகபட்சமாக ரூ.50 லட்சம் வரை வழங்கப்படும்.

இந்த முகாம் காலத்தில் சமா்பிக்கப்படும் பொது கடன் விண்ணப்பங்களுக்கு ஆய்வுக் கட்டணத்தில் 50 சதவீத சலுகை அளிக்கப்படும்.

நீட்ஸ் திட்டத்துக்கு ஆய்வுக் கட்டணத்தில் விலக்கு அளிக்கப்படுகிறது. இந்த வாய்ப்பை புதிய தொழில் முனைவோா் பயன்படுத்திக் கொள்ளலாம் என்றாா் ஆட்சியா் த.மோகன்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.