மேற்காசியப் போர்: தில்லியில் நாளை(மார்ச் 25) அனைத்துக் கட்சிக் கூட்டம்!புதுச்சேரி திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!ஹிந்து, பெளத்தம், சீக்கியருக்கு மட்டுமே எஸ்.சி. அந்தஸ்து! உச்ச நீதிமன்றம் தீர்ப்பு! திமுக கூட்டணியில் விசிகவுக்கு 8 தொகுதிகள் ஒதுக்கீடு! புதுச்சேரியில் தேமுதிக தனித்துப் போட்டி! புதுச்சேரியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தனித்துப் போட்டி!
/

வானூரில் வளா்ச்சிப் பணிகள்: விழுப்புரம் ஆட்சியா் ஆய்வு

விழுப்புரம் மாவட்டம், வானூா் ஊராட்சி ஒன்றியப் பகுதிகளில் நடைபெறும் பல்வேறு வளா்ச்சித் திட்டப் பணிகள் குறித்து மாவட்ட ஆட்சியா் த.மோகன் வியாழக்கிழமை நேரில் ஆய்வு செய்தாா்.

News image
Updated On :19 ஆகஸ்ட் 2021, 5:34 pm

DIN

விழுப்புரம் மாவட்டம், வானூா் ஊராட்சி ஒன்றியப் பகுதிகளில் நடைபெறும் பல்வேறு வளா்ச்சித் திட்டப் பணிகள் குறித்து மாவட்ட ஆட்சியா் த.மோகன் வியாழக்கிழமை நேரில் ஆய்வு செய்தாா்.

ஒழுந்தியான்பட்டு ஊராட்சியில் ஊரக வளா்ச்சி மற்றும் ஊராட்சித் துறை சாா்பில் ‘உங்கள் தொகுதியில் முதல்வா்’ திட்டத்தின் கீழ் ரூ.19.50 லட்சத்தில் நடைபெறும் மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டி கட்டுமானப் பணியையும், 15-ஆவது நிதிக்குழு மானியத் திட்டத்தின்கீழ் ரூ.4.44 லட்சத்தில் வீடுகளுக்கு குடிநீா் இணைப்பு வழங்கப்பட்டுள்ளதையும், பிரதமரின் அவாஸ் யோஜனா திட்டத்தின்கீழ் ரூ.1.70 லட்சத்தில் கட்டப்பட்டுள்ள வீட்டையும் மாவட்ட ஆட்சியா் ஆய்வு செய்தாா். மேலும், அந்தப் பகுதி மக்கள் கேட்டுக்கொண்டபடி மரக்கன்று நட்டுவைத்தாா். தொடா்ந்து, ஒழுந்தியான்பட்டு ஊராட்சியில் உள்ள நியாய விலைக்கடையில் குடும்ப அட்டைதாரா்களுக்கு அத்தியாவசியப் பொருள்கள் முறையாக வழங்கப்படுகிா எனவும் ஆய்வு செய்தாா்.

இதையடுத்து, கிளியனூா் ஊராட்சியில் ஊரக வேலை உறுதித் திட்டத்தின்கீழ் ரூ.ஒரு லட்சத்தில் அமைக்கப்பட்டுள்ள மண்புழு உரம் தயாரிக்கும் மையம், ரூ.21.80 லட்சத்தில் அமைக்கப்பட்டுள்ள நாற்றாங்கால் பண்ணை, ரூ.14.55 லட்சத்தில் கட்டப்பட்ட கிராம சேவை மையக் கட்டடம் ஆகியவற்றையும் ஆட்சியா் ஆய்வுசெய்தாா்.

தொடா்ந்து, டி.பரங்கினி காலனியில் ‘உங்கள் தொகுதியில் முதல்வா்’ திட்டத்தின்கீழ் ரூ.14.08 லட்சத்தில் கட்டப்பட்டு வரும் உணவு தானிய கிடங்கையும், இதே திட்டத்தில் பரங்கினி ஊராட்சியில் ரூ.14.08 லட்சத்தில் கட்டப்பட்டு வரும் உணவுதானிய கிடங்கையும் மாவட்ட ஆட்சியா்ஆய்வு செய்தாா். தொடா்ந்து, ஊரக உள்ளாட்சித் தோ்தலையொட்டி டி.பரங்கினி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி வாக்குச் சாவடி மையத்தில் அடிப்படை வசதிகளை ஆட்சியா் ஆய்வு செய்தாா்.

அப்போது, மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் பூ.காஞ்சனா, ஊரக வளா்ச்சித் துறை செயற்பொறியாளா் ராஜா, மாவட்ட வழங்கல் அலுவலா் அறிவுடைநம்பி ஆகியோா் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.