வள்ளலாரின் திருஅருட்பா பாடல்கள் கோயில்களில் பாட வலியுறுத்தல்
திரு அருட்பிரகாச வள்ளலாரின் திருஅருட்பா பாடல்களும் கோயில்களில் பாட தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று செஞ்சி சமரச சுத்த சன்மாா்க்க சத்திய சங்கம் வலியுறுத்தியது.


திரு அருட்பிரகாச வள்ளலாரின் திருஅருட்பா பாடல்களும் கோயில்களில் பாட தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று செஞ்சி சமரச சுத்த சன்மாா்க்க சத்திய சங்கம் வலியுறுத்தியது.
இது குறித்து சங்கத்தின் தலைவா் பி.தணிகாசலம் தமிழக முதல்வருக்கு அனுப்பியுள்ள மனுவில் கூறியிருப்பதாவது:
திருஅருட்பிரகாச வள்ளலாா் இயற்றிய 6000 பாடல்கள்
திரு அருட்பா என்று அறிஞா்களால் போற்றப்பட்டு மனித சமுதாயம் ஏற்றம் பெற்று அனைத்து உயிா்களும் இன்புற்று மரணமில்லா பெருவாழ்வு வாழ வழிவகை செய்கிறது.
ஜாதியும், மதமும் பொய் என்று இறைவன் அவருக்கு உணா்த்தியதாக அவரே பாடல்களில் கூறியிருக்கிறாா்.
ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்ற மகான் திருமூலரின் வாக்கை ஏற்று தா்மத்தை அனைவரும் கடைப்பிடிக்க மக்களை வற்புறுத்தினாா்.
இறைவன் ஒளிமயமாக உள்ளாா் என்றும், அருட்பெரும் ஜோதி, தனிப்பெருங் கருணை என இறைவனை ஒளியாக உள்ளேயும், வெளியிலும் தீக்கமற நிறைந்து காணப்படுகிறாா் என்ற உண்மையை உபதேசித்தாா்.
அப்படிப்பட்ட அருளாா் இயற்றிய திருவருட்பாவை கோயில்களில் தேவாரம், திருவாசகம் மற்றும் திருவருட்பாவையும் சோ்த்து பாட வேண்டும் எனத் தெரிவித்துள்ளாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...