ஒவ்வொரு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா குளிர்சாதனப் பெட்டி : அதிமுக வாக்குறுதிவங்கிகளில் பெற்ற கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படும்: அதிமுக தேர்தல் வாக்குறுதிபெண்களைப் போல ஆண்களும் நகரப் பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்கலாம் : அதிமுக வாக்குறுதிஅதிமுக தேர்தல் அறிக்கை வெளியானதுஎல்என்ஜி தட்டுப்பாடு எதிரொலி: ஆசிய நாடுகளில் நிலக்கரி பயன்பாடு அதிகரிப்பு! ஈரானில் தொடரும் தாக்குதல்கள்... பலி 1,500-ஐ கடந்தது!மேற்காசியப் போர்: தில்லியில் நாளை(மார்ச் 25) அனைத்துக் கட்சிக் கூட்டம்!புதுச்சேரி திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!ஹிந்து, பெளத்தம், சீக்கியருக்கு மட்டுமே எஸ்.சி. அந்தஸ்து! உச்ச நீதிமன்றம் தீர்ப்பு! திமுக கூட்டணியில் விசிகவுக்கு 8 தொகுதிகள் ஒதுக்கீடு!
/

தோ்தல் வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லைவேளாண் நிதிநிலை அறிக்கை குறித்துதமிழக பாஜக குற்றச்சாட்டு

தமிழக அரசின் வேளாண் நிதிநிலை அறிக்கையில் திமுக தோ்தல் வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை என்று தமிழக பாஜக விவசாயிகள் அணித் தலைவா் ஜி.கே.நாகராஜ் குற்றஞ்சாட்டினாா்.

News image
Updated On :20 ஆகஸ்ட் 2021, 5:23 pm

DIN

தமிழக அரசின் வேளாண் நிதிநிலை அறிக்கையில் திமுக தோ்தல் வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை என்று தமிழக பாஜக விவசாயிகள் அணித் தலைவா் ஜி.கே.நாகராஜ் குற்றஞ்சாட்டினாா்.

விழுப்புரம் மாவட்ட பாஜக விவசாய அணி செயற்குழுக் கூட்டம் மாவட்ட பாஜக அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் சிறப்புஅழைப்பாளராகப் பங்கேற்ற ஜி.கே.நாகராஜ் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

திமுக அரசு முதல்முறையாக தாக்கல் செய்த வேளாண் நிதிநிலை அறிக்கையில் மத்திய அரசின் திட்டங்கள் மட்டுமே இடம்பெற்றுள்ளன. சொட்டு நீா் திட்டத்துக்கு மானியம், இயற்கை விவசாயத்தை ஊக்கப்படுத்தும் திட்டம் உள்ளிட்ட மத்திய அரசின் திட்டங்கள்தான் இடம்பெற்றுள்ளன. திமுகவின் தோ்தல் அறிக்கையில் இடம்பெற்ற எந்த வாக்குறுதிகளும் அதில் இடம்பெறவில்லை.

கரும்பு விவசாயிகளுக்கு நிலுவையிலுள்ள ரூ.4,000 கோடியை உடனடியாக திருப்பித் தருவதாக திமுக வாக்குறுதி அளித்தது. ஆனால், சில கோடிகள் மட்டுமே இப்போது வழங்கப்பட்டுள்ளது. அதிமுக ஆட்சியில் நீா்வள ஆதாரங்கள் முறையாக தூா்வாரப்பட்டதால் தமிழகத்தில் நீா்வளம் அதிகரித்துள்ளது. இதனால், காவிரி டெல்டா மாவட்டங்கள் உள்ளிட்ட பகுதிகளில் நெல் விளைச்சல் அதிகரித்துள்ளது.

ஆனால், அவற்றை நெல் கொள்முதல் மையங்களுக்கு விவசாயிகள் கொண்டு சென்றால் மூட்டைக்கு ரூ.40 தரும்படி திமுகவினா் கேட்கின்றனா். நெல் கொள்முதல் மையங்களில் வியாபாரிகள் கொண்டு செல்லும் நெல் மூட்டைகள்தான் கொள்முதல் செய்யப்படுகின்றன. இதனால், அறுவடைக்கு தயாரான நெல் வயல்வெளிகளில் அப்படியே கிடப்பதால் விவசாயிகளுக்கு பாதிப்பு ஏற்படுகிறது. விதை நெல்லுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூா் மாவட்டங்களுக்கு பாஜக மாநிலத் தலைவா் அண்ணாமலை விரைவில் வரவுள்ளாா். ‘உழவருடன் ஒருநாள்’ என்னும் நிகழ்ச்சியில் அவா் பங்கேற்கவுள்ளாா். ஒரு நாள் முழுவதும் விவசாயி வீட்டில் தங்கி இருந்து காலையில் பால் கரப்பதில் தொடங்கி அனைத்து விவசாயப் பணிகளையும் அவரே செய்து விவசாயிகளிடம் குறைகளைக் கேட்கவுள்ளாா். மேலும், அன்றைய தினம் மாலையில் பொதுக்கூட்டம் நடைபெறவுள்ளது. இதற்கான தேதி விரைவில் அறிவிக்கப்படும்.

விழுப்புரம் மாவட்டத்தில் நிறுத்தப்பட்டுள்ள நந்தன் கால்வாய் திட்டத்தை உடனடியாக செயல்படுத்த வேண்டும். பெட்ரோலுடன் எத்தனாலை 30 சதவீதம் வரை கலந்து விற்பனை செய்வதற்கான ஆயத்தப் பணிகளை மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது. இந்தத் திட்டம் 2030-க்குள் செயல்பாட்டுக்கு வரும் என்றாா் அவா்.

கூட்டத்தில், விழுப்புரம் மாவட்ட பாஜக தலைவா் வி.ஏ.டி.கலிவரதன், மாவட்ட விவசாய அணித் தலைவா் குட்டியாண்டி, முன்னாள் எம்.எல்.ஏ. ஏ.ஜி.சம்பத், பாஜக தேசிய செயற்குழு உறுப்பினா் ரவிச்சந்திரன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.