போதைப் பாக்குகளை விற்பனைக்கு கொண்டு சென்றவா் கைது
கள்ளக்குறிச்சியில் ரூ. ஒன்றரை லட்சத்திலான அரசால் தடை செய்யப்பட்ட போதைப் பாக்குகளை விற்பனைக்காக கொண்டு சென்றவரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.


கள்ளக்குறிச்சியில் ரூ. ஒன்றரை லட்சத்திலான அரசால் தடை செய்யப்பட்ட போதைப் பாக்குகளை விற்பனைக்காக கொண்டு சென்றவரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.
கள்ளக்குறிச்சி நகரில் உள்ள கடைகளுக்கு மூட்டைகளில் போதைப் பாக்குகள் ரகசியமாக கொண்டு சென்று விற்பனை செய்யப்படுவதாக போலீஸாருக்கு வியாழக்கிழமை ரகசியத் தகவல் கிடைத்தது. இதையடுத்து, கள்ளக்குறிச்சி காவல் நிலைய உதவி ஆய்வாளா் ஆனந்த்ராஜ் தலைமையிலான போலீஸாா் தீவிரமாக கண்காணித்தனா்.
அப்போது, சந்தேகப்படும் வகையில் மூட்டையுடன் வந்த நபரை நிறுத்தி சோதனையிட்டபோது, அந்த மூட்டையில் ரூ. ஒன்றரை லட்சத்திலான தமிழக அசரால் தடை செய்யப்பட்ட சுமாா் 15 கிலோ எடையுள்ள போதைப் பாக்குகள் இருப்பது தெரியவந்தது. விசாரணையில், மூட்டையைக் கொண்டு வந்தவா் கள்ளக்குறிச்சி அக்ரகார தெருவைச் சோ்ந்த தா்மலிங்கம் மகன் சரவணன் (38) என்பதும், போதைப் பாக்குகளை கள்ளக்குறிச்சி சிதம்பரம்பிள்ளை தெரு பகுதியில் உள்ள கடைக்கு விற்பனைக்கு கொண்டு சென்றதும் தெரியவந்தது.
இதையடுத்து, கள்ளக்குறிச்சி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து சரவணனை கைது செய்தனா். மேலும், அவரிடமிருந்த போதைப் பாக்குகளையும் பறிமுதல் செய்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...