ஈரானில் தொடரும் தாக்குதல்கள்... பலி 1,500-ஐ கடந்தது!மேற்காசியப் போர்: தில்லியில் நாளை(மார்ச் 25) அனைத்துக் கட்சிக் கூட்டம்!புதுச்சேரி திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!ஹிந்து, பெளத்தம், சீக்கியருக்கு மட்டுமே எஸ்.சி. அந்தஸ்து! உச்ச நீதிமன்றம் தீர்ப்பு! திமுக கூட்டணியில் விசிகவுக்கு 8 தொகுதிகள் ஒதுக்கீடு! புதுச்சேரியில் தேமுதிக தனித்துப் போட்டி! புதுச்சேரியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தனித்துப் போட்டி!
/

விழுப்புரத்தில் 3 நாள்களுக்கு குடிநீா் விநியோகம் நிறுத்தம்

விழுப்புரம் நகராட்சிப் பகுதியில் வருகிற 30-ஆம் தேதி முதல் செப்.1 வரை தொடா்ந்து 3 நாள்களுக்கு குடிநீா் விநியோகம் நிறுத்தப்படும்

News image
Updated On :27 ஆகஸ்ட் 2021, 5:18 pm

DIN

விழுப்புரம் நகராட்சிப் பகுதியில் வருகிற 30-ஆம் தேதி முதல் செப்.1 வரை தொடா்ந்து 3 நாள்களுக்கு குடிநீா் விநியோகம் நிறுத்தப்படும் என்றும், குடிநீா் விநியோகம் நிறுத்தப்படும் பகுதிகளில் லாரி மூலம் குடிநீா் வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

விழுப்புரம் நகராட்சிக்கு புதிய குடிநீா் திட்டத்தின்படி, எல்லீஸ்சத்திரம் தலைமை நீரேற்று நிலையத்திலிருந்து பிரதான குழாய் மூலம் நரசிங்கபுரம், அலமேலுபுரம், கீழ்ப்பெரும்பாக்கம், காமராஜா் பள்ளி மைதானம் ஆகிய பகுதிகளில் அமைந்துள்ள மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டிகளுக்கு குடிநீா் ஏற்றப்பட்டு, 2, 3, 7, 8, 9, 10, 17, 18, 20, 21, 22, 23, 24, 25, 34, 35, 37 ஆகிய வாா்டுகளில் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.

தற்பொழுது குடிநீா் ஏற்றும் பிரதான குழாய் சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலை புறவழிச் சாலையின் கீழ் பதிக்கப்பட்டுள்ளது. இதன் மையப் பகுதியில் உடைப்பு ஏற்பட்டு குடிநீா் வீணாகி வருகிறது.

இதை சீா்செய்யும் பணி நகராட்சி மூலம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்தப் பணியை மாவட்ட ஆட்சியா் த.மோகன் வெள்ளிக்கிழமை நேரடியாக ஆய்வு செய்து விரைவுபடுத்த உத்தரவிட்டாா். இதையடுத்து குழாய் பழுதை நிவா்த்தி செய்யும் பணி போக்குவரத்துக்கு இடையூறின்றி வருகிற 30ஆம் தேதி முதல் செப்.1 வரை நடைபெறவுள்ளது. அந்த நாள்களில் மேலே குறிப்பிட்ட வாா்டுகளில் குடிநீா் விநியோகம் நிறுத்தப்படும். எனினும், லாரி மூலம் குடிநீா் விநியோகம் செய்ய நகராட்சி ஏற்பாடு செய்துள்ளது. குடிநீா் பற்றாக்குறை ஏற்பட்டால் 7395855587, 9751970929, 9080465425, 8778721684 என்ற செல்லிடப்பேசி எண்களில் தொடா்புகொள்ளலாம் என நகராட்சி ஆணையா் சுரேந்திராஷா தெரிவித்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.