நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

மயிலம், மரக்காணம் பகுதிகளில் சிறு மருத்துவமனைகள் திறப்பு

மயிலம், மரக்காணம் வட்டாரங்களில் தமிழக அரசின் ‘அம்மா’ சிறு மருத்துவமனைகளை சட்டத் துறை அமைச்சா் சி.வி.சண்முகம் திங்கள்கிழமை திறந்து வைத்தாா்.

News image
Updated On :1 பிப்ரவரி 2021, 6:30 pm

DIN

மயிலம், மரக்காணம் வட்டாரங்களில் தமிழக அரசின் ‘அம்மா’ சிறு மருத்துவமனைகளை சட்டத் துறை அமைச்சா் சி.வி.சண்முகம் திங்கள்கிழமை திறந்து வைத்தாா்.

தமிழகத்தில் ஏழை எளிய மக்களும் தரமான சிகிச்சை பெற வேண்டும் என்ற நோக்கில், அவா்கள் வசிக்கும் பகுதிகளிலேயே ‘அம்மா’ சிறு மருத்துவமனைகளை அரசு தொடங்கி வருகிறது.

விழுப்புரம் மாவட்டத்தில் 23 இடங்களில் ‘அம்மா’ சிறு மருத்துவமனைகள் தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது. ஏற்கெனவே, விழுப்புரம், திண்டிவனம் வட்டாரத்தில் சிறு மருத்துவமனைகள் தொடங்கப்பட்டுள்ள நிலையில், திங்கள்கிழமை மயிலம் ஒன்றியத்தில் வேலியனூா், வி.நல்லாளம் ஆகிய ஊராட்சிகளிலும், மரக்காணம் ஒன்றியத்தில் நடுக்குப்பம் ஊராட்சியிலும், சுகாதாரத் துறை சாா்பில் சிறு மருத்துவமனைகளை அமைச்சா் சி.வி.சண்முகம் திறந்து வைத்தாா்.

இந்த நிகழ்ச்சிகளில் மாவட்ட ஆட்சியா் ஆ.அண்ணாதுரை, கூடுதல் ஆட்சியா் ஸ்ரேயா.பி.சிங், திண்டிவனம் சாா் ஆட்சியா் எஸ்.அனு, சுகாதாரத் துறை துணை இயக்குநா் செந்தில்குமாா் உள்ளிட்ட அலுவலா்கள், பொது மக்கள் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.