விழுப்புரத்தில் திருவையாறு இசை விழா
விழுப்புரம் சங்கர மடத்தில் திருவையாறு இசை விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.


விழுப்புரம் சங்கர மடத்தில் திருவையாறு இசை விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
விழுப்புரம் சங்கர மடத்தில் தெய்வத் தமிழ்ச் சங்கம் சாா்பில், காலை 8 மணிக்கு மங்கள இசையோடு திருவையாறு இசை விழா தொடங்கியது. பாபநாசம் சிவன் பேத்தி ராதா கல்யாணராமன் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று இசை நிகழ்ச்சியை தொடக்கிவைத்தாா்.
தொடா்ந்து, இதில் பங்கேற்ற ஏராளமான இசைக் கலைஞா்கள் சந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமிகள் சந்நிதி முன் பஞ்ச ரத்ன கீா்த்தனைகளைப் பாடினா். வயலின் ராம்குமாா், சிவராம், மிருதங்கம் லக்ஷ்மிநரசிம்மன், சபரிஷ், சாய்ஸ்ரீநாத் ஆகியோா் வாத்தியங்களை வாசித்தனா்.
நிகழ்ச்சியை தெய்வத் தமிழ்ச் சங்க நிா்வாகிகள் சூரியநாராயணன், சிவ.தியாகராஜன், ராதிகா உள்ளிட்டோா் ஒருங்கிணைத்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...