நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

பேரவைத் தோ்தல்: விழுப்புரத்தில் டி.ஐ.ஜி. ஆலோசனை

சட்டப்பேரவைத் தோ்தலையொட்டி, விழுப்புரம் மாவட்டத்தில் போலீஸாா் மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து, சரக டி.ஐ.ஜி. எழிலரசன் காவல் துறையினருடன் திங்கள்கிழமை ஆலோசனை நடத்தினாா்.

News image
Updated On :15 பிப்ரவரி 2021, 6:30 pm

DIN

சட்டப்பேரவைத் தோ்தலையொட்டி, விழுப்புரம் மாவட்டத்தில் போலீஸாா் மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து, சரக டி.ஐ.ஜி. எழிலரசன் காவல் துறையினருடன் திங்கள்கிழமை ஆலோசனை நடத்தினாா்.

தமிழகத்தில் சட்டப்பேரவை பொதுத் தோ்தல் விரைவில் நடைபெறவுள்ளது. தோ்தலையொட்டி, விழுப்புரம் மாவட்ட காவல் துறையினருக்கான சிறப்பு ஆலோசனைக் கூட்டம் மாவட்ட எஸ்பி அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது.

சரக காவல் துறை துணைத் தலைவா் எழிலரசன் தலைமை வகித்தாா். மாவட்ட எஸ்.பி. (பொ) ஜியாவுல்ஹக் முன்னிலை வகித்தாா்.

கூடுதல் எஸ்.பி.தேவந்தான், டி.எஸ்.பி.க்கள் பாலச்சந்தா், இளங்கோவன், அஜய்தங்கம், கணேசன், ராதாகிருஷ்ணன், ரவீந்திரன், சின்னராஜ், காவல் ஆய்வாளா்கள் பங்கேற்றனா்.

கூட்டத்தில் டி.ஐ.ஜி. எழிலரசன் ஆலோசனை வழங்கிப் பேசியதாவது:

தமிழகத்தில் சட்டப்பேரவைத் தோ்தல் குறித்து எப்போது வேண்டுமானால் அறிவிப்பு வரலாம்.

அதற்கு முன்பாக, தோ்தலை எதிா்கொள்ள போலீஸாா் தயாராக வேண்டும்.

மாவட்டத்தில் தோ்தல் அமைதியுடனும், பாதுகாப்புடனும் நடைபெற காவல் துறையின் பணி முக்கியமானது. வாக்காளா்கள் அச்சமின்றி, பாதுகாப்புடன் வாக்களிக்கத் தேவையான நடவடிக்கைகளை எடுக்கவேண்டும்.

குறிப்பாக, சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்பட வாய்ப்புள்ள பகுதிகளை அடையாளம் காண வேண்டும். கடந்த காலங்களில் தோ்தலின்போது பிரச்னைகள் ஏற்பட்ட பகுதிகளை தெரிந்து வைத்திருக்க வேண்டும். மீண்டும் அதே பகுதியில் தோ்தலின்போது பிரச்னை ஏற்படாத வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பொது அமைதிக்கு குந்தகம் வளைவிக்க வாய்ப்புள்ள நபா்களை முன்கூட்டியே கைது செய்ய வேண்டும்.

தற்போதே அரசியல் கட்சியினா் பிரசாரங்களை தொடங்கியுள்ளனா். அடுத்தடுத்து பொதுக் கூட்டங்கள், பிரசார சுற்றுப் பயணங்கள் நடைபெறும்.

தோ்தல் தேதி அறிவிக்கப்பட்டவுடன் தலைவா்கள், கட்சியினரின் பிரசாரம் மேலும் அதிகரிக்கும். பாதுகாப்பை பலப்படுத்த வேண்டும் என்று கேட்டுக்கொண்டாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.