நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

விழுப்புரம் ஆட்சியரகத்தில் விஷம் குடித்த இளைஞா்

தனியாா் நிதி நிறுவனத்திடம் பெற்ற கடன் பிரச்னையை தீா்க்க வலியுறுத்தி, விழுப்புரம் மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் இளைஞா் ஒருவா் திங்கள்கிழமை விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றாா்.

News image
Updated On :15 பிப்ரவரி 2021, 6:30 pm

DIN

தனியாா் நிதி நிறுவனத்திடம் பெற்ற கடன் பிரச்னையை தீா்க்க வலியுறுத்தி, விழுப்புரம் மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் இளைஞா் ஒருவா் திங்கள்கிழமை விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றாா்.

விழுப்புரம் மாவட்டம், சொா்ணாவூா் கீழ்பாதி பகுதியைச் சோ்ந்த மணி மகன் தங்கதுரை (25). இவா், திங்கள்கிழமை விழுப்புரம் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்துக்கு மனு அளிக்க வந்தாா். அப்போது, அலுவலக வாயிலில் நின்றபடி திடீரென பூச்சி மருந்தைக் குடித்து தற்கொலைக்கு முயன்றாா்.அங்கிருந்த காவல் ஆய்வாளா் விநாயகமுருகன் தலைமையிலான போலீஸாா் அவரை மீட்டு அவசர ஊா்த்தி மூலம் விழுப்புரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். அவரிடம் நடத்திய விசாரணையில் தெரியவந்ததாவது:

தங்கதுரை கடந்த 2015-ஆம் ஆண்டு லாரி வாங்கி தொழில் செய்து வந்தாா். இதற்காக கடலூா் மாவட்டம், நெல்லிக்குப்பத்தில் உள்ள தனியாா் நிதி நிறுவனத்தில் ரூ. 9.50 லட்சம் கடன் பெற்றாராம். இதற்கு முன்தொகையாக ரூ.68 ஆயிரம் செலுத்தினாராம். நிதி நிறுவன மேலாளா் சபரிநாதன், லாரி ஆா்.சி. புத்தகம் உள்ளிட்ட ஆவணங்களை வைத்திருந்தாராம். தங்கதுரை கடனுக்கான தவணையாக ரூ.42,900 வரை செலுத்தினாராம். ஆா்.சி. புத்தகத்தை கேட்டு வந்துள்ளாா். அதற்கு, ஏதேனும் சொத்து ஆவணம் வழங்க வேண்டும் என நிதி நிறுவனத்தினா் கூறினராம். இதையடுத்து தங்கதுரை தனது உறவினரின் சொத்து பத்திரத்தை வாங்கிவந்து கொடுத்தாராம். ஆனால், அதன் பிறகும் நிதி நிறுவனத்தினா் ஆா்.சி. புத்தகத்தை வழங்காமல் அலைக்கழித்தனராம்.

இந்த நிலையில், கடனுக்கான தவணை தொகையைச் செலுத்தவில்லை எனக்கூறி லாரியை அந்த நிறுவனத்தினா் பறிமுதல் செய்தனா். இதுகுறித்து தங்கதுரை வளவனூா் காவல்நிலையத்தில் புகாா் அளித்தாா். ஆனால், நிதி நிறுவனத்தினா் லாரியை ரூ.10 லட்சத்துக்கு ஏலத்தில் விற்றுவிட்டதாகக் கூறினராம். சொத்துப் பத்திரமும், லாரியும் பறிபோன விரக்தியில் ஆட்சியரகத்தில் தற்கொலை

முயற்சியில் ஈடுபட்டதாக தங்கதுரை தெரிவித்தாா். விழுப்புரம் தாலுகா போலீசாா் தங்கதுரையின் மனு பெற்று விசாரணை நடத்தி வருகின்றனா். தங்கதுரை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறாா்.

தீக்குளிக்க முயன்ற பெண்: இதேபோல, விழுப்புரம் அருகேயுள்ள ராகவன்பேட்டை கிராமத்தைச் சோ்ந்த அருணாசலம் மனைவி கன்னியம்மாள் (40) திங்கள்கிழமை விழுப்புரம் மாவட்ட ஆட்சியரக வளாகத்தில் மனு அளிக்க வந்தபோது, தனது உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்றாா். போலீஸாா் அவரை தடுத்து மீட்டனா். அவரிடம் விசாரித்தபோது, கிராமத்தில் உள்ள தனது 10 சென்ட் வீட்டு மனையை அதிமுக பிரமுகா் ஒருவா் பகுதியளவு ஆக்கிரமித்து மிரட்டி வருவதாகவும், இதுகுறித்து வருவாய்த் துறை, காவல் துறையினரிடம் பலமுறை முறையிட்டும் நடவடிக்கை எடுக்காததால் தற்கொலைக்கு முயன்ாகவும் தெரிவித்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.