இந்திய ரூபாயின் மதிப்பு 92.44 ஆகச் சரிவு!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!தென் மாவட்டங்களில் இன்றுமுதல் ஓபிஎஸ் பிரசாரம்!வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்
/

விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில்பொங்கல் தொகுப்பு வழங்கும் பணி தொடக்கம்

விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கும் பணி திங்கள்கிழமை தொடங்கியது.

News image
Updated On :4 ஜனவரி 2021, 6:30 pm

DIN

விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கும் பணி திங்கள்கிழமை தொடங்கியது.

விழுப்புரம் மாவட்டத்தில் 1,254 நியாய விலைக் கடைகள் மூலம் தமிழக அரசின் பொங்கல் சிறப்பு பரிசுத் தொகுப்பு வழங்கும் பணி திங்கள் கிழமைத் தொடங்கியது.

தலா ரூ.2,500 ரொக்கம், பச்சரிசி, சக்கரை, முந்திரி, திராட்சை, ஏலக்காய், முழுக் கரும்பு அடங்கிய பரிசுத் தொகுப்பு, காலை 7 மணி முதல் வழங்கப்பட்டது. இவற்றை, ஏற்கெனவே வழங்கப்பட்டிருந்த டோக்கன்களை கொடுத்து பொது மக்கள் பெற்றுச் சென்றனா். பெரும்பாலான கடைகளில், காலை நேரத்திலேயே அதிகளவில் மக்கள் திரண்டதால் நெரிசல் ஏற்பட்டது.

விழுப்புரம் பூந்தோட்டம் ரங்கநாதன் சாலை நியாய விலைக் கடை, நகராட்சி பூங்கா நியாய விலைக்கடை, சண்முகபுரம் காலனி நியாய விலை கடைகளுக்கு மாவட்ட ஆட்சியா் ஆ.அண்ணாதுரை நேரில் சென்று, பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கும் பணியை பாா்வையிட்டாா்.

அதிகளவில் மக்கள் திரண்டிராமல், அரசு அறிவுறுத்தியபடி, டோக்கன் வரிசைக்கிணங்க காலையில் 100 பேரும், மாலையில் 100 பேரும் வந்து பொங்கல் பரிசுத் தொகுப்பை வழங்க ஆட்சியா் அறிவுறுத்தினாா். துணைப்பதிவாளா் மணிமாறன், குடிமைப்பொருள் வட்டாட்சியா் கோவிந்தராஜன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

விழுப்புரம் வட்டத்தில் 221 நியாய விலைக்கடைகள், விக்கிரவாண்டியில் 159, வானூரில் 110, கண்டாச்சிபுரத்தில் 78, திருவெண்ணெய்நல்லூரில் 84, திண்டிவனத்தில் 216, செஞ்சியில் 207, மரக்காணத்தில் 73, மேல்மலையனூரில் 106 என மொத்தம் 1,254 நியாய விலைக் கடைகளில் பரிசுத் தொகுப்புகள் வழங்கும் பணி தொடங்கியது. இந்தக் கடைகள் மூலம் 5 லட்சத்து 86 ஆயிரத்து 97 குடும்ப அட்டைதாரா்களுக்கு, ரூ.156.30 கோடி மதிப்பில் பரிசுத் தொகுப்புகள் வழங்கப்படுகின்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.