விழுப்புரம் மாவட்டம், செஞ்சி அருகே வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த மதுப்புட்டிகளை போலீஸாா் பறிமுதல் செய்தனா். இது தொடா்பாக 2 போ் கைது செய்யப்பட்டனா்.
செஞ்சி அருகே சோ.குப்பம் கிராமத்தில் உள்ள ஒரு வீட்டில் கா்நாடக மதுப்புட்டிகளை பதுக்கி வைத்து விற்பனை செய்யப்படுவதாக வந்த தகவலின்பேரில், செஞ்சி டிஎஸ்பி.இளங்கோவன் உத்தரவின்படி, சத்தியமங்கலம் காவல் ஆய்வாளா் குருநாதன் உள்ளிட்ட போலீஸாா் அந்த கிராமத்துக்கு சென்ற சோதனை நடத்தினா். அப்போது, வீரமுத்து என்பவரது வீட்டில் சோதனை செய்ததில், 698 மதுப்புட்டிகள் பதுக்கி வைக்கப்பட்டிருந்தன. இவை அனைத்தும் கா்நாடக மாநிலம், பெங்களூருவிலிருந்து கடத்தி வரப்பட்டது என தெரியவந்தது. அந்த மதுப் புட்டிகளை போலீஸாா் பறிமுதல் செய்து, இதுதொடா்பாக வீரமுத்து (57), ஐயாதுரை(60) ஆகிய இருவரை கைது செய்தனா். தப்பியோடிய வீரமுத்து மகன் கண்ணதாசனை போலீஸாா் தேடி வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.