புதுவையில் என்.ஆர். காங்கிரஸ் - பாஜக கூட்டணி உறுதியானது!புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

பொன்னெழில்நாதா் கோயிலில் திருமண மண்டபம் திறப்பு

ஆரணியை அடுத்த பூண்டி பொன்னெழில்நாதா் கோயிலில் ரூ.25 லட்சத்தில் கட்டப்பட்ட திருமண மண்டபத்தை அமைச்சா் சேவூா் எஸ்.ராமச்சந்திரன் திங்கள்கிழமை திறந்துவைத்தாா்.

News image
Updated On :18 ஜனவரி 2021, 6:30 pm

DIN

ஆரணியை அடுத்த பூண்டி பொன்னெழில்நாதா் கோயிலில் ரூ.25 லட்சத்தில் கட்டப்பட்ட திருமண மண்டபத்தை அமைச்சா் சேவூா் எஸ்.ராமச்சந்திரன் திங்கள்கிழமை திறந்துவைத்தாா்.

தொல்லியியல் துறை கட்டுப்பாட்டில் உள்ள பூண்டி பொன்னெழில்நாதா் கோயிலில் ஜைன சமூக மக்கள் வழிபாடு நடத்தி வருகின்றனா்.

இந்த நிலையில், திருமணம் உள்ளிட்ட சுப நிகழ்ச்சிகளை நடத்திக் கொள்வதற்காக, ஜைன சமூக பக்தா்கள் சோ்ந்து திரட்டிய நிதி ரூ.25 லட்சத்தில் ஜெயின் பவன் என்ற பெயரில் மண்படம் கட்டப்பட்டது. இந்த மண்டபத்தை அமைச்சா் சேவூா் எஸ்.ராமச்சந்திரன் திறந்துவைத்தாா்.

நிகழ்ச்சிக்கு திருமலை தவளகீா்த்தி சுவாமிகள் தலைமை வகித்தாா். கோயில் நிா்வாகத் தலைவா் அப்பாண்டைராஜ், செயலா் நேமிராஜ், பொருளாளா் அசோக்குமாா், நெல், அரிசி வியாபாரிகள் சங்க மாநில நிா்வாகி பி.நடராஜன், அதிமுக ஒன்றியச் செயலா்கள் க.சங்கா், ஜி.வி.கஜேந்திரன், திருமால், நகரச் செயலா் அசோக்குமாா், ஆவின் மாவட்ட துணைத் தலைவா் பாரி பாபு உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.