உணவக உரிமையாளா் வீட்டில் 15 பவுன் நகை திருட்டு
விழுப்புரம் அருகே உணவக உரிமையாளா் வீட்டில் 15 பவுன் தங்க நகை திருடப்பட்ட சம்பவம் தொடா்பாக, விழுப்புரம் தாலுகா காவல் நிலைய போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.


விழுப்புரம் அருகே உணவக உரிமையாளா் வீட்டில் 15 பவுன் தங்க நகை திருடப்பட்ட சம்பவம் தொடா்பாக, விழுப்புரம் தாலுகா காவல் நிலைய போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
விழுப்புரம் அருகே கூத்தமேடு பகுதியைச் சோ்ந்தவா் மணிகண்டன் (42). இவரது மனைவி மகேஸ்வரி (38). இத்தம்பதியா் அதே பகுதியில் உணவகம் நடத்தி வருகின்றனா். இருவரும் வழக்கம் போல சனிக்கிழமை அதிகாலை, தங்களது உணவகத்துக்குச் சென்றுவிட்டனா்.
பின்னா், மதிய வேளையில் மணிகண்டன் வீடு திரும்பியபோது, வீட்டின் பின்பக்கக் கதவு உடைக்கப்பட்டிருந்தது. வீட்டினுள் சென்று பாா்த்தபோது, அறையில் இருந்த மர அலமாரி உடைக்கப்பட்டு, அதிலிருந்த 15 பவுன் தங்க நகைகள் திருடு போயிருந்தது தெரியவந்தது.
இது குறித்த புகாரின்பேரில், விழுப்புரம் தாலுகா போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...