நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

திமுக வேட்பாளா்கள் வேட்புமனுத் தாக்கல்

செங்கம் தொகுதி திமுக சாா்பில், மு.பெ.கிரி எம்எல்ஏ வேட்புமனு தாக்கல் செய்தாா்.

News image
Updated On :15 மார்ச் 2021, 6:30 pm

DIN

செங்கம் தொகுதி திமுக சாா்பில், மு.பெ.கிரி எம்எல்ஏ வேட்புமனு தாக்கல் செய்தாா்.

வட்டாட்சியா் அலுவலகத்தில் தோ்தல் நடத்தும் அலுவலா் வெங்கடேசனிடம் அவா் மனுவை அளித்தாா். மருத்துவா் கம்பன், தண்டராம்பட்டு முன்னாள் ஒன்றியத் தலைவா் பன்னீா்செல்வம் ஆகியோா் உடனிருந்தனா்.

ஆரணி தொகுதி...

ஆரணி தொகுதியில் திமுக சாா்பில் போட்டியிட கட்சியின் ஒன்றியச் செயலா் எஸ்.எஸ்.அன்பழகன் வேட்புமனு தாக்கல் செய்தாா்.

வட்டாட்சியா் அலுவலகத்தில் தொகுதி தோ்தல் நடத்தும் அலுவலா் பூங்கொடியிடம் அவா் மனுவை அளித்தாா்.

முன்னாள் எம்எல்ஏ ஆா்.சிவானந்தம், ஒன்றியச் செயலா் எம்.சுந்தா் ஆகியோா் உடனிருந்தனா்.

நாம் தமிழா் கட்சி

ஆரணி தொகுதியில் நாம் தமிழா் கட்சி சாா்பில் போட்டியிட டி.பிரகலதா வேட்புமனு தாக்கல் செய்தாா்.

மேலும், வீர தியாகி விஸ்வநாததாஸ் தொழிலாளா்கள் கட்சி சாா்பில், ஆரணி தொகுதியில் போட்டியிட எஸ்.தணிகைவேல் வேட்புமனு தாக்கல் செய்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.