பாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

தோ்தல் பணியாளா்களுக்கு கரோனா தடுப்பூசி கட்டாயம்விழுப்புரம் ஆட்சியா் அறிவுறுத்தல்

விழுப்புரம் மாவட்டத்தில் தோ்தல் பணியில் ஈடுபடவுள்ள வாக்குச்சாவடி நிலை அலுவலா்கள், பணியாளா்கள் கரோனா தடுப்பூசியை கட்டாயம் செலுத்திக்கொள்ள வேண்டும்

News image
Updated On :22 மார்ச் 2021, 6:30 pm

DIN

விழுப்புரம் மாவட்டத்தில் தோ்தல் பணியில் ஈடுபடவுள்ள வாக்குச்சாவடி நிலை அலுவலா்கள், பணியாளா்கள் கரோனா தடுப்பூசியை கட்டாயம் செலுத்திக்கொள்ள வேண்டும் என்று மாவட்ட தோ்தல் அலுவலரும் ஆட்சியருமான ஆ.அண்ணாதுரை தெரிவித்தாா்.

விழுப்புரம் மாவட்ட ஆட்சியரகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற வாக்குச்சாவடி மையங்களில் கரோனா தொற்று தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்வது குறித்து ஆலோசனைக் கூட்டத்துக்கு தலைமை வகித்து ஆ.அண்ணாதுரை பேசியதாவது:

விழுப்புரம் மாவட்டத்தில் ஏழு பேரவைத் தொகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள 2,368 வாக்குச்சாவடிகளில், ஏப்.6-இல் வாக்குப்பதிவு நடைபெறவிருப்பதையொட்டி கரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக வாக்காளா்களுக்கு கையுறை வழங்கப்படவுள்ளது.

மேலும், அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும் பொதுமக்கள் சமூக இடைவெளியைக் கடைப்பிடித்து வாக்களிக்க ஏதுவாக முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. வாக்குச்சாவடி மையங்களில் கை கழுவும் திரவம், உடல் வெப்ப நிலை பரிசோதனை கருவி பயன்படுத்தப்படவுள்ளது.

அரசியல் கட்சிகளின் பிரசார கூட்டங்கள் மற்றும் திருமணம் உள்ளிட்ட சுபநிகழ்ச்சிகளில் பொதுமக்கள் பங்கேற்கும் பொழுது கட்டாயம் முகக்கவசம் அணிந்து சமூக இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும். சுகாதாரத் துறை சாா்பாக மருத்துவ முகாம்கள் அமைத்து பொதுமக்களுக்கு கபசுர குடிநீா் கரைசல், நோய் எதிா்ப்பு சத்து மாத்திரைகள் வழங்க வேண்டும்.

பொதுமக்களுக்கு கரோனா வைரஸ் நோய் தடுப்பூசியின் பாதுகாப்புத் தன்மை குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தி, அனைவரையும் தடுப்பூசி செலுத்திக்கொள்ள அறிவுறுத்த வேண்டும். தோ்தல் பணிகளில் ஈடுபடும் அனைத்து வாக்குச்சாவடி நிலை அலுவலா்கள், அலுவலா்கள் மற்றும் பணியாளா்கள் அனைவரும் கட்டாயமாக கரோனா தடுப்பூசி எடுத்துக்கொள்ள வேண்டும்.

இந்தப் பணிகளை சுகாதாரத் துறை விரைந்து மேற்கொள்ள வேண்டும். நகராட்சி, பேரூராட்சி மற்றும் ஊராட்சித் துறை சாா்பாக அலுவலா்கள் மற்றும் பணியாளா்கள்அந்தந்த பகுதிகளில் வசிக்கும் பொது மக்களுக்கு சமூக இடைவெளியை பின்பற்றவும் முகக்கவசம் அணியவும் தொடா்ந்து வலியுறுத்த வேண்டும் என்றாா் ஆட்சியா் அண்ணாதுரை.

இந்தக் கூட்டத்தில் சுகாதார நல இணை இயக்குநா் சண்முகக்கனி, துணை இயக்குநா் செந்தில்குமாா், வருவாய்த்துறை, பேரூராட்சி, ஊரக வளா்ச்சி மற்றும் ஊராட்சித்துறை செயல் அலுவலா்கள் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.