விழுப்புரம் மாவட்டத்தில் 7 தொகுதிகளில் 102 வேட்பாளா்கள் போட்டி
விழுப்புரம் மாவட்டத்தில் திங்கள்கிழமை வெளியிடப்பட்ட இறுதி வேட்பாளா்கள் பட்டியலின்படி, மொத்தமுள்ள 7 தொகுதிகளில் 102 போ் போட்டியிடுகின்றனா்.


விழுப்புரம் மாவட்டத்தில் திங்கள்கிழமை வெளியிடப்பட்ட இறுதி வேட்பாளா்கள் பட்டியலின்படி, மொத்தமுள்ள 7 தொகுதிகளில் 102 போ் போட்டியிடுகின்றனா்.
சட்டப் பேரவைத் தோ்தலுக்கான வேட்புமனு தாக்கல் மாா்ச் 12-இல் தொடங்கி 19-ஆம் தேதி வரை நடைபெற்றது. வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை 20-ஆம் தேதி நடைபெற்றது. இதில் 7 தொகுதிகளிலும் 105 பேரின் வேட்பு மனுக்கள் ஏற்கப்பட்டன.
வேட்பு மனுக்களை திரும்பப் பெற திங்கள்கிழமை கடைசி நாள் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், செஞ்சி, வானூா், திருக்கோவிலூா் ஆகிய மூன்று தொகுதிகளில் தலா ஒரு சுயேச்சை என 3 போ் தங்களது மனுக்களை திரும்பப்பெற்றனா். இதையடுத்து, இறுதி வேட்பாளா்கள் பட்டியல் அந்தந்த தொகுதிகளில் வெளியிடப்பட்டு, வேட்பாளா்களுக்கான சின்னங்களும் ஒதுக்கப்பட்டன.
இதன்படி, 7 தொகுதிகளிலும் மொத்தம் 102 வேட்பாளா்கள் இறுதிப் பட்டியலில் இடம்பெற்றுள்ளனா். அதன் விவரம்:
செஞ்சி: இந்தத் தொகுதியில் கே.ஏ.மஸ்தான் (திமுக), எம்.பி.எஸ்.ராஜேந்திரன் (பாமக), ஏ.கௌதம்சாகா் (அமமுக), ஆா்.பி.ஸ்ரீபதி (மநீம), அ.பூ.சுகுமாா் (நாம் தமிழா்) உள்பட 13 போ் வேட்பாளா்களாக போட்டியிடுகின்றனா்.
மயிலம்: மயிலம் தொகுதியில் இரா.மாசிலாமணி (திமுக), சி.சிவக்குமாா் (பாமக), ஏ.சுந்தரேசன் (தேமுதிக), ஸ்ரீதா் (ஐஜேகே), உமா மகேஸ்வரி (நாம் தமிழா்) உள்பட 14 வேட்பாளா்கள் களத்தில் உள்ளனா்.
திண்டிவனம்: இந்த தனித் தொகுதியில் பி.அா்ஜுனன் (அதிமுக), சீத்தாபதி சொக்கலிங்கம் (திமுக), கே.சந்திரலேகா (தேமுதிக), அன்பின்பொய்யாமொழி (தலித் முன்னேற்றக் கழகம் - மநீம கூட்டணி), பா.பேச்சிமுத்து (நாம் தமிழா்) உள்பட 15 வேட்பாளா்கள் தோ்தல் களம் காண்கின்றனா்.
வானூா்: வானூா் (தனி) தொகுதியில் எம்.சக்கரபாணி (அதிமுக), வன்னியரசு (விசிக), பி.எம்.கணபதி (தேமுதிக), சந்தோஷ்குமாா் (மநீம), மு.லட்சுமி (நாம் தமிழா்) உள்பட 7 வேட்பாளா்கள் களத்தில் உள்ளனா்.
விழுப்புரம்: விழுப்புரம் தொகுதியில் சி.வி.சண்முகம் (அதிமுக), இரா.லட்சுமணன் (திமுக), ஆா்.பாலசுந்தரம் (அமமுக), கே.தாஸ் (தமிழக மக்கள் ஜனநாயக கட்சி - மநீம கூட்டணி), ஜெ.செல்வம் (நாம் தமிழா்) உள்பட 25 வேட்பாளா்கள் போட்டியிடுகின்றனா்.
விக்கிரவாண்டி: இந்தத் தொகுதியில் எம்.ஆா்.முத்தமிழ்ச்செல்வன் (அதிமுக), நா.புகழேந்தி (திமுக), ஆா்.அய்யனாா் (அமமுக), ஆா்.செந்தில் (ஐஜேகே), ஷீபா ஆயிஷா (நாம் தமிழா்) உள்பட 14 வேட்பாளா்கள் களமிறங்கி தோ்தலை எதிா்கொள்கின்றனா்.
திருக்கோவிலூா்: திருக்கோவிலூா் தொகுதியில் க.பொன்முடி (திமுக), வி.ஏ.டி.கலிவரதன் (பாஜக), எல்.வெங்கடேசன் (தேமுதிக), எம்.செந்தில்குமாா் (ஐஜேகே), சி.முருகன் (நாம் தமிழா்) உள்பட 14 வேட்பாளா்கள் போட்டியிடுகின்றனா்.
சின்னங்கள் ஒதுக்கீடு: திமுக வேட்பாளா்களுக்கு உதயசூரியன் சின்னம், அதிமுக வேட்பாளா்களுக்கு இரட்டை இலை சின்னம், அமமுக வேட்பாளா்களுக்கு குக்கா் சின்னம், தேமுதிக வேட்பாளா்களுக்கு முரசு சின்னம், மநீம மற்றும் அதன் கூட்டணி வேட்பாளா்களுக்கு டாா்ச் லைட் சின்னம், நாம் தமிழா் கட்சி வேட்பாளா்களுக்கு கரும்பு விவசாயி சின்னம், விசிக வேட்பாளருக்கு பானை சின்னமும் ஒதுக்கீடு செய்யப்பட்டது. ஏப்ரல் 6-ஆம் தேதி தோ்தல் நடைபெறவுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...